govlk

வினா விடை

நீங்கள் ஒரு அங்கீகாரம் பெற்ற ஆய்வுகூடமா?

சில அளவீட்டு முறைமைகள் இலங்கை அங்கீகாரம் பெற்ற குழுவின் ஊடாக தராதர அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரங்களை இந்த வலைப்பதிவில் காணலாம்.

நீங்கள் எந்த வகை அளவீட்டுத் திருத்தங்களை வழங்குகின்றீர்கள்?

நாங்கள் அளவீட்டுத்திருத்தங்களை தரப்பட்ட அளவீட்டுப் பிரிவுகளின் கீழ் வழங்குகின்றோம்:

  • நிறை
  • வெப்பநிலை
  • விசை
  • அமுக்கம்
  • முறுக்கம்
  • கொள்ளளவு
  • அடர்த்தி
  • நீளம்

விபரங்களை வலைப்பதிவில் பார்வையிட முடியும்.

பொதுவான கேள்விகளுக்கு யாரைத் தொடர்புகொள்ள வேண்டும்?

தொடர்புகளுக்கு:

பதவி மற்றும் பிரிவு தொலைபேசி இல.
தொலைநகல் இல. மின்னஞ்சல்

பணிப்பாளர்
(அளவியல்)

+ 94 112 671 566 +94 112 674 619 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நான் எனது அளவீட்டுத் திருத்த சான்றிதழை தொலைத்தால் அதற்குரிய மாற்றீட்டைப் பெற முடியுமா?

எமது அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். (தொலைபேசி இல +94 112 671 567 -72 (நீடிப்பு 567)) நீங்கள் மேலதிகமாக பெற்றுக்கொள்ளும் பிரதியொன்றுக்கான கட்டணமாக ரூபா 500 அறவிடப்படும்.

உங்களது உத்தரவாதக் கொள்கை என்ன?

அளவுத்திருத்தத்தின் இயல்பு காரணமாகவும், உபகரணமாக அளவுத் திருத்த ஆய்வகத்தின் கட்டுப்பாட்டின்  இல்லாத காரணத்தாலும் எங்களால்  உத்தரவாதம் தர முடியாது. எனின் வெளிப்புற காரணிகளால் உபகரணங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இதனால் உபகரணத்தின் செயல்திறன் குறைவடையக் கூடும்.

எங்களுடைய வேலைத்தளங்களில் அளவுத்திருத்தங்களை வழங்க முடியுமா?

உங்களுடைய தேவைகள் மற்றும் உபகரண செயல்முறை வகைகளைப் பொறுத்தது. தயவுடன் உங்கள் தேவைகள் தொடர்பில் தொழில்நுட்ப முகாமையாளருடன் தொடர்பு கொள்ளவும்.

தேசிய தர நிலைகளில் நீங்கள் எதைப் பின்பற்றுகின்றீர்கள்?

எமது அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் (MUSSD) மற்றும் பிற வெளிநாட்டு தேசிய அளவீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் S7 அலகுகளுக்கு அமைவாக பின்பற்றத்தக்கது எமது அளவுத்திட்டம்.

நான் விலைக்கூற்றைப் பெற விரும்பும் சாதனங்களின் பட்டியலை கொண்டுள்ளேன். உங்களிடம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட படிவம் உள்ளதா?

ஆம், இருக்கின்றது. குறிப்பு இல FM/DM/04

நான் எங்கே எனது உபகரணத்தை அனுப்ப வேண்டும்?

17, விக்டோரியா பிலேஸ், எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 08. என்ற முகவரிக்கு அளவியல் பிரிவிலுள்ள counter இல் உங்கள் உபகரணங்களை ஒப்படைக்க வேண்டும்.

நீங்கள் முன்னுரிமை சேவையை வழங்குகின்றீர்களா?

எப்பொழுதும் இல்லை. இது அளவுத்திருத்தத்தின் வகை மற்றும் ஆய்வகத்தின் வேலைப்பழுவில் சார்ந்திருக்கும். இந்த சேவைக்கு மேலதிக கட்டணம் அறவிடப்படும்.

அளவுத்திருத்த சான்றிதழுடன் எனது உபகரணங்களை திரும்பப் பெற எவ்வளவு காலம் எடுக்கும்?

வழமையாக எமது சேவைக்காலம் அண்ணளவாக ஒரு மாதம். இருப்பினும் சில தவிருக்க முடியாத சூழ்நிலைகள் இதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது:

  • உபகரணத்தின் வகை/ மாதிரி பரீட்சயம் இல்லாமல் இருத்தல்
  • அலுவலகத்தில் காணப்படும் வேலைப்பழு
  • நாம் விபரங்கள் மற்றும் நடைமுறைகளை தேட வேண்டியிருப்பின்

நீங்கள் பழுது பார்த்தலை ஏற்றுக்கொள்ளுகின்றீர்களா?

மன்னிக்கவும், இல்லை.