govlk

பொறியியல் தரங்களை உருவாக்கும் பிரிவு

தேசிய பொறியியல் கட்டளைகள், பொறியியல் கட்டளைகள் பிரிவினில் உருவாக்கப்படுகிறது. இவ்வகையான கட்டளைகள் ஆலோசனை குரு முறை மற்றும் பிரதிநிதித்துவ முறையினூடாக தன்னிச்சையான ஈடுபாடு, மற்றும் அக்கறை உடையவர்களில் பிரதிநிதிகளாக பாவனையாளர்கள், உற்பத்தியாளர்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பக்கசார்பற்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்படுகிறது.

தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக சிறந்த முறையினூடாக முடிந்த அளவு அனைத்து விடயங்களிலும் நிபுணத்துவம் கொண்டவர்களைக் கொண்ட தொழில்நுட்ப குழுக்களை இந்நிறுவனம் உருவாக்குகிறது.

பிரதிபலிப்பது, கூட்டுத்தீர்வு, தொழில்நுட்ப பாவனை, வர்த்தகம், வியாபாரம் மற்றும் நிர்வாகத்திறன் என்வன திட்டமிடப்பட்டதைப் பெறுவதற்கு,

  • பொருட்கள் மற்றும் சேவைகளை பரிமாறுவதற்கான சக்தி மற்றும் மூலாதாரங்கள் மூலம் முழுமையான பொருளாதாரம்.
  • பாவனையாளர்களின் எதிர்ப்பார்ப்பாகிய நேர்த்தியானதும் போதுமானதுமான தரங்களைக் கொண்ட பொருட்கள் மற்றும் சேவைகளைப் பாதுகாத்தல்.
  • பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் உயிராபத்து மற்றும்,
  • அனைத்து அக்கறையுடையவர்களுக்கும் ஆக்கபூர்வமான தொடர்புகளை ஏற்படுத்தல்.

இந்த கட்டளைகளாவன பிரத்தியோகமான மூலப்பொருட்கள் அல்லது பொருட்கள், சில வகையான தொழிற்சாலைகளுக்கான சிபாரிசு செய்யப்பட்ட பாவனைகளுக்கான தொகுப்பு, அல்லது பரிசோதனை முறைகள், சொற்களுக்கான வரைவிலக்கனங்கள் அல்லது வேறு ஏதாவது ஒரு உருவத்திலான கட்டளையாக்கம்.

இலங்கைக் கட்டளைகள் நிறுவனத்தின் கொள்கைக்கு அமைவாக உலகளாவிய ரீதியிலான  கட்டளைகள் மற்றும் முறைமைகளுக்கு அமைவாக கட்டளைகள் உருவாக்கப்படுகிறது. சாத்தியமான அனைத்து உலகளாவிய ரீதியிலான கட்டளைகள் நேரடியாக உள்வாங்கப்படுகிறது.

உலகளாவிய போட்டித்தன்மை காரணமாக, பாவனையாளர்களின் எதிர்ப்பார்ப்பை பாதுகாப்பதற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரத்தை எளிதாக்குவதற்காக கட்டளைகள் உருவாக்குதல் திட்டங்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றன.

பொருட்கள், சரக்குகள், மூலப்பொருட்கள், முறைமைகள் மற்றும் நடைமுறைகள் சம்மந்தமான அன்னளவாக 1600 கட்டளைகள் இன்றுவரை உருவாக்கப்பட்டுள்ளன. புதிய மூலப்பொருட்கள், தயாரிப்பு முறை நடைமுறை மற்றும் தொழிநுட்பங்கள் சம்மந்தமாக அனேகமானவை மீழாய்வு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறானவற்றில் மீழாய்வு வருடம் குறிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்டவர்களினால் கட்டயமாக்கப்பட்டாலொழிய அனைத்து இலங்கை கட்டளைகளும் தன்னிச்சையானவை.