govlk

முகப்பு

இலங்கை கட்டளைகள் நிறுவன பேரவை விரிவான விடயங்களை உள்ளடக்கி இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கும் நடவடிக்கைகளை அமுலாக்குவதற்கும் துறைசார் குழுக்களை நியமிக்கிறது. தற்போது செயற்படுகின்ற துறைசார் குழுக்கள் வருமாறு,

  • இலத்திரனியல் பொறியியல்பற்றிய துறைசார் குழு
  • மின்சார உபகரணங்கள் மற்றும் மனை பொருட்கள்பற்றிய துறைசார் குழு
  • மின்சார கேபிள்கள் மற்றும் மின்வலி ஊடுகடத்திகள்பற்றிய துறைசார் குழு
  • இலங்கை இலத்திரன்தொழில்நுட்ப குழு
  • தகவல் தொழில்நுட்பம் பற்றிய துறைசார் குழு
  • எந்திர பொருட்கள் முறைமைகள் மற்றும் உற்பத்தி பொறியியல்பற்றிய துறைசார் குழு
  • கட்டிட மற்றும் நிர்மாண பொருட்கள்பற்றிய துறைசார் குழு

துறைசார் குழுக்கள் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்,  சுயாதீன ஆய்வு மற்றும் பரிசோதனை அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட நிபுணர்கள் ஆகிய துறைகளிலிருந்து நிபுணர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் துறைசார் குழு குறித்த அமைப்புகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களையும் தனிப்பட்ட திறன் அடிப்படையில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது.

இலங்கை கட்டளைகள் நிறுவனம் துறைசார் குழுக்களுடன் கலந்தாலோசித்து குறிப்பிட்ட தரப்படுத்தல் கருத்திட்டங்களுடன் செயலாற்றுவதற்கு பணிக்குழுக்களை நியமிக்கலாம்.

குழு உறுப்பினர்களுக்கு மாத்திரம் பொதுவாக குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும். விசேட நோக்கங்கங்களுக்காக வெளியாட்கள் கலந்துகொள்ளுவதாக இருந்தால் அதுபற்றி முற்கூட்டியேஇலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கு அறிவித்ததன் பின்னர் இலங்கை கட்டளைகள் நிறுவனம் துறைசார் குழு தலைவருடன் கலந்தாலோசித்து அழைப்பிதழை அனுப்பும்.

ஒவ்வொரு தரப்படுத்தல் கருத்திட்டமும்  இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பொறியியல் தரப்படுத்தல் பிரிவின் உதவிப் பணிப்பாளரால் (பொறியியல்) முகாமைப்படுத்தப்படும். பல மாற்று நடைமுறைகளும் இருக்கின்றன. அவை குறித்த விடயத்தின் தன்மை மற்றும் சிக்கல் நிலை, கிடைக்கக்கூடிய தரவுகள், பரிசீலனைக்கான ஆவணங்கள், ஏனைய தகுந்த தரங்கள் மற்றும் தகவல் என்பவற்றின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

தொடர்பு விபரங்கள்:

பதவியும் பிரிவும் தொலைபேசி இல
மின்னஞ்சல்

பணிப்பாளர்
(பொறியியல் தரப்படுத்தல் பிரிவு)

+ 94 112 672 612 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.