govlk

மேலோட்டம்

ஒருங்கிணைக்கப்பட்ட தரப்படுத்தல் நடவடிக்கையில் வினைத்திறன்மிக்க மிகச் சிறந்த ஆய்வுகூட பரிசோதனை சேவைகள் அத்தியாவசியமான ஓர் ஆக்கக்கூறாகும். 1984ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க இலங்கை தரப்படுத்தல் நிறுவக (SLSI) சட்டம் தேசிய மட்டத்தில் வர்த்தக மற்றும் கைத்தொழில்களுடன் தொடர்புடைய ஏனைய நடவடிக்கைகளுடன் தர உறுதிப்பாட்டையும் தரப்படுத்தலையும் மேம்படுத்துவதற்கு ஆய்வுகூட சேவைகளை ஸ்தாபித்து பராமரிப்பதற்காக ஏற்பாடுகளை வழங்குகின்றது. இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்தின் (SLSI) ஆய்வுகூட சேவைகள் பிரிவு மேற்குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது தேசிய ஆய்வுகூடமாகும். இது கீழே குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளுடன் தொடர்புடைய அனைத்தையும் உள்ளடக்கிய ஆய்வுகூட சேவைகளை வழங்குகின்றது.

  • நுகர்வோர் உற்பத்திகள் மற்றும் பொருட்கள் என்பவற்றின் விரிவான வகையை இணங்கியொழுகும் பரிசோதனை.
  • ஆய்வுகூட பரிசோதனை பற்றிய தொழில்நுட்ப பயிற்சி, பொதுவான ஆய்வுகூட நடைமுறைகள், தரகட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போன்றவை.

தற்பொழுது, பின்வரும் ஆறு அலகுகளைக் கொண்ட பரிசோதனை ஆய்வுகூடங்கள் ஊடாக வியாபார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ஆய்வுகூட சேவைகள் பிரிவு தனியார்துறை அமைப்புகள் மற்றும் அவற்றின் வினைத்திறன்மிக்க பணியாட்டொகுதி அங்கத்தினர்களையும் சேர்த்து பொதுமக்களுக்கு வினைத்திறன்மிக்க மற்றும் நம்பத்தகுந்த சேவைகளை வழங்குகின்றது.

  • இரசாயன ஆய்வுகூடம்
  • மின்சார மற்றும் இலத்திரனியல் ஆய்வுகூடம்
  • உணவு ஆய்வுகூடம்
  • பொருட்கள் ஆய்வுகூடம்
  • நுண்ணுயிரியல் ஆய்வுகூடம்
  • ஆடைத்துணிகள் ஆய்வுகூடம்

சர்வதேச தரங்கள் உட்பட தேசிய தரங்களுக்கு அமைவாக உற்பத்திகள் மற்றும் பொருட்களை விரிவாக பரிசோதனைசெய்யும் நடவடிக்கைகள் உட்பட ஆய்வுகூடம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு இலங்கை தரப்படுத்தல் நிறுவக (SLSI) ஆய்வுகூடங்கள் நவீன மற்றும் வினைத்திறன்மிக்க வசதிகளைக் கொண்டுள்ளன. சிறந்த திறமைமிக்க பணியாட்தொகுதியினர் இந்த ஆய்வுகூடங்களில் பணியாற்றுகின்றனர். அவர்கள் தத்தமது துறைகளில் சிறப்பறிவுடையவர்களாக இருப்பதோடு அடிக்கடி அவர்களுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச பயிற்கள் வழங்கப்படுகின்றன. பெரும்பாலும் அனைத்து விஞ்ஞானிகளும் சம்பந்தப்பட்ட துறைகளில் பட்டப்பின்படிப்பு பட்டம் பெற்றவர்களாக இருக்கின்றனர். தற்பொழுது கிடைக்கும் பரிசோதனை வசதிகள்  தேசிய மற்றும் சர்வதேச வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஒழுங்கான முறையில் தரமுயர்த்தப்படுகின்றன.