govlk

மேலோட்டம்

'SLS குறியீட்டு திட்டம்' என பரவலாக அறியப்படுகின்ற உற்பத்தி சான்றுப்படுத்தல் திட்டம் என்பது ஓர் உற்பத்தியின் தரம்பற்றி மூன்றாம் தரப்பாக உத்தரவாதமளிக்கின்றது. இந்த திட்டம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தியாளர்கள் இலங்கை தரத்திற்கு உற்பத்திசெய்கின்ற வியாபார பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு அவர்களின் வியாபார பொருட்களுக்கு 'SLS' குறியீட்டை வழங்குவதற்கு இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்திற்கு (SLSI) அனுமதியளிக்கின்றது. 1984ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க தரங்கள் சட்டம் மற்றும் அதன் ஒழுங்குவிதிகள் இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்திற்கு அத்தகைய அனுமதியை உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதற்கு அதிகாரமளிக்கின்றது.

இந்த உற்பத்தி சான்றுப்படுத்தல் திட்டம் அதன் தன்மையில் தொண்டு அடிப்படையிலானதாகும். எவ்வாறாயினும் SLS குறியீடு 1979ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் 2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை சட்டம் என்பவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்கள் ஊடாக வழங்கப்படுகின்றது. எவ்வாறாயினும் இந்த ஒழுங்குவிதி மாற்றமின்றி இருக்கிறது.

ஒரு வியாபார பொருளின் மீது அல்லது உற்பத்தியின் மீது இடும் சான்றுப்படுத்தல் குறியீடு அப்பொருள் அல்லது உற்பத்தி இலங்கையின் தகுந்த தரப்படுத்தல் விபரக்கூற்றுகளுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதையும் அதை அதன் தரம்பற்றிய நியாயமான உறுதிப்பாட்டுடன் கொள்வனவுசெய்யமுடியும் என்பதையும் குறிக்கிறது. நிறுவகத்தின் தகுதிவாய்ந்த பரிசோதகர்களால் மேற்கொள்ளப்படுகின்ற தர பரிசோதனை ஊடாகவும் உற்பத்தி பரிசோதனை உடாகவும் தர உறுதிப்படுத்தல் முறைமையின் ஒழுங்கான கண்காணிப்பு ஊடாகவும் விபரக்கூற்றின் தேவைகளுடன் இணங்கியொழுகுவது உறுதிசெய்யப்படுகிறது.

வியாபார பொருட்களைத் தயாரிக்கின்றவர்கள் தகுந்த தரங்களை இணங்கியொழுகும் பொறுப்பைக் கொண்டிருக்கின்றனர் என்பதை நிர்வகிப்பது நிறுவகத்தின் பொது கொள்கையாகும். இதைப் பாதுகாப்பதற்கு நிறுவனம் குறிக்கின்ற வழிகாட்டல்கள் பொருத்தமான தர உறுதிப்படுத்தல் முறைமையை அனுமதி பத்திரம் வைத்திருப்பவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆவணப்படுத்தல் மற்றும் தர முறைமையை அமுலாக்குதல் என்பவற்றிற்கு அவர் பொறுப்பு வகிக்கின்ற அதே வேளையில் நிறுவகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் ஒழுங்கான கால இடைவெளியில் தர முறைமையின் தொடர்ச்சியான செயற்பாடு சரிபார்க்கப்படும்.