govlk

எஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - உள்நாடு

இலங்கை தரப்படுத்தல் நிறுவக (SLSI) குறியிடல் திட்டமென்றால் என்ன?

SLS குறியீட்டுப் பயன்பாட்டால் ஏற்படும் நன்மைகள்

  • SLS குறியீடு விற்பனை மேம்பாட்டுக்கான பிரதான சந்தைப்படுத்தல் கருவியாக இருக்கின்றது.
  • SLS குறியீடுள்ள உற்பத்திகள் ஏனைய உற்பத்திகளிலிருந்து வேறுபடுவதோடு போட்டித்தன்மையையும் உயர்த்துகிறது.
  • SLS குறியீடு உள்ள ஸ்தாபனங்களின் முன்னேற்றம் குறியீடு இல்லாதவற்றை விட திட்டவட்டமானதாக இருக்கும்.
  • வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகளைக் குறைக்கிறது.
  • அரச துறை SLS குறியீடுள்ள உற்பத்திகளை நாடுவதால் சந்தைப்பங்கு அதிகரிக்கிறது.
  • கம்பெனியின் பிரதிமை மேம்படும். அதன்மூலம் வேலையாட்களின் ஊக்கம் அதிகரிக்கும்.
  • உற்பத்தித் திறன் மேம்படும்.
  • வாடிக்கையாளரையும் சட்ட தேவைகளையும் தரங்கள் கூட்டிணைப்பதால், உற்பத்திகள் அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • வாடிக்கையாளர் - தயாரிப்பாளர் - SLS உறவுகள் தொடர்ச்சியாக மேம்படும்.
  • BSI, ISI போன்ற வெளிநாட்டு சான்றுப்படுத்தல் குறியீடுகளைப் பெற்றுக்கொள்ள அத்திவாரமாக அமைகிறது.
  • நுகர்வோர் நியாயமான தர உறுதிப்பாட்டுடன் உற்பத்திகளைத் தெரிவுசெய்ய முடியும்.

அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஒரு வியாபார பொருளின் மீது அல்லது உற்பத்தியின் மீது சான்றுப்படுத்தல் குறியீட்டைப் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற விரும்புகின்ற ஒரு தயாரிப்பாளர் முதலில் அந்த வியாபார பொருள்/உற்பத்தி சம்பந்தமாக இலங்கை தரப்படுத்தல் விபரக்கூற்று அங்கீகரிக்கப்பட்டு நிறுவகத்தினால் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட தரத்தை உள்ளடக்குகிற ஒவ்வொரு வியாபார பொருளுக்கு அல்லது உற்பத்திக்கு வெவ்வேறாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வியாபார பொருள் அல்லது உற்பத்தி ஒரே வணிகப் பெயரைக் கொண்டிருந்து விண்ணப்பதாரரின் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில்/தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தால் ஒரே வணிகப் பெயரின் கீழ் ஒவ்வொரு இடத்திலுள்ள தொழிற்சாலைகளிலும் தயாரிக்கப்படுகின்ற வியாபார பொருளுக்கு அல்லது உற்பத்திக்கு வெவ்வேறாக ஒரே நேரத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு உற்பத்தி சான்றுப்படுத்தல் பிரிவுடன் தொடர்புகொள்ளவும். (தொலைபேசி 2671567-72, நீடிப்பு -225, 354, 584, 591, 367, 348)

அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு முன்னர் மதிப்பீடுசெய்தல்

விண்ணப்பம் கிடைத்தவுடன் விண்ணப்பத்தில் தரப்பட்டுள்ள விபரங்களை அடிப்படையாகக்கொண்டு தயாரிப்பாளரின் தர உறுதிப்படுத்தலுக்கான ஒழுங்குமுறைகள் போதுமானதா என்பதை நிறுவகம் மதிப்பீடுசெய்யும். விண்ணப்பதாரரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தர முகாமைத்துவ முறைமையை பரிசோதிப்பதற்கு பரிசோதகர்/கள் தொழிற்சாலையில்களில் ஈடுபடுத்தப்படுவார்/கள். கொள்வனவு, உற்பத்தி கட்டுப்பாட்டு நடைமுறைகள், உபகரணங்களின் பொருத்தமான தன்மை, பரிசோதிப்பு மற்றும் பரிசோதனை வசதிகள், பயிற்சி, பதிவுகளைப் பேணுதல், தேவையான வளங்களின் ஏற்பாடுகள் என்பவைபற்றி குறிப்பிடத்தக்களவு கவனம் செலுத்தப்படும்.

பரிசோதனைக்காகத் தேவைப்படுகின்ற மாதிரிகளை தொழிற்சாலைகளிலிருந்து சேகரித்துக்கொள்ளுவதற்கு நிறுவகத்தின் பரிசோதகர்களுக்கு விண்ணப்பதாரர் அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும். பரிசோதாகர்களக்கான செலவு, மாதிரிகளக்கான செலவு மற்றும் பரிசோதனை கட்டணங்கள் என்பவற்றை விண்ணப்பதாரர் ஏற்றுக்கொள்ள வேண்டும்

அந்த உற்பத்தி தரத்திற்குத் தேவைப்படுபவைகளை உறுதிப்படுத்தினால் (தொடர்ச்சியாக இரண்டு மாதிரிகளைப் பரிசோதித்து உறுதிப்படுத்திக்கொள்ளல்) மற்றும் தர முறைமை திருப்திகரமாக இருந்தால், பரிசோதகர்கள் குழு ஒன்றினால் இறுதி தர ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அனுமதிப்பத்திரம் வழங்கல்

பின்வரும் நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்பட்டால் சான்றுப்படுத்தல் குறியீட்டைப் பயன்படுத்துவதற்கு ஓர் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

  • குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இரண்டு தொடர்ச்சியான மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதிக்கப்பட்டபோது அவை இலங்கை தரநிர்ணய கோவையின் குறித்த தரத்தை உறுதிப்படுத்தியிருத்தல்; (உற்பத்திசெய்யப்பட்ட பல்வேறு வகைகள்/வேறுபட்ட பொருட்கள்/அளவுகள் என்பவற்றின் அடிப்படையில் பல மாதிரிகள் பரிசோதிக்கப்படும்)
  • திருப்திகரமான முறையில் ஆவணப்படுத்தப்பட்ட தர முகாமைத்துவ முறைமை அமுலாக்கப்பட்டிருத்தல்.
  • விண்ணப்பதாரர் பொதுவான மற்றும் குறிப்பிட்ட அனுமதிப்பத்திர நிபந்தனைகளுக்கு கட்டுப்பட உடன்படுதல்.
  • விண்ணப்பதாரர் ஒரு வருடத்திற்கான கட்டணத்தைச் செலுத்துதல்.

அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவுடன், தயாரிப்பாளர் அவருடைய உற்பத்திப் பொருள்மீது SLS சின்னத்தைக் காட்சிப்படுத்த வேண்டும்.

அனுமதிப்பத்திரத்திற்கு பிற்பட்ட மதிப்பீடுகள்

இலங்கையின் தர விபரக்கூற்றுகளுக்கு அமைவாக குறித்த உற்பத்தியின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு தயாரிப்பாளரின் வசதிக்கேற்ப தொடர்ச்சியாக, தர முறைமையின் திருப்திகரமான செயற்பாட்டையும் அனுமதிப்பத்திர நிபந்தனைகளையும் இணங்கியொழுகுவதை உறுதிசெய்துகொள்ளுவதற்காக காலத்திற்குக்காலம் பரிசோதனை நடத்தப்படும்.

விபரக்கூற்றுகளுடன் இணங்கியொழுகுவதை பரிசோதிப்பதற்காக தயாரிப்பாளர்களிடமிருந்து / திறந்த சந்தையிலிருந்து / விநியோகத்தை மேற்கொள்ளுகின்ற தரப்பிடமிருந்து பெறப்பட்ட உற்பத்திகளின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படும்.

அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர் அனுமதிப்பத்திரத்தின் அனைத்து விடயங்களிலும் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை இணங்கியொழுகுவதை உறுதிப்படுத்த வேவண்டும். அத்துடன் எப்பொழுதும் இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்திற்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் நல்க வேண்டும்.

அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடி காலம்

அனுமதிப்பத்திரம் மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும் தர முறைமைகளை திருப்திகரமாக செயற்படுத்துதல் மற்றும் மாதிரிகள் இலங்கை தரத்திற்கேற்ப இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தி அதைப் புதுப்பிக்க முடியும்.

அனுமதிப்பத்திரத்தின் விடயப்பரப்பெல்லை

ஒரே தர விபரக்கூற்றுகளின் கீழ் வருகின்ற ஆனால் வித்தியாசமான வணிகப் பெயர்களில் சந்தைப்படுத்தப்படுகின்ற வியாபார பொருட்கள் அல்லது உற்பத்திகள் என்பவற்றிற்கு தனியான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரேவிதமான வியாபாரப் பொருள் அல்லது உற்பத்தி ஒரேவிதமான வணிகப் பெயரைக் கொண்டிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட பொறித்தொகுதியில் தயாரிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு பொறித்தொகுதிக்கும் வெவ்வேறு அனுமதிப்பத்திரங்களை ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரேவிதமான வியாபார பொருட்களை அல்லது உற்பத்திகளை ஒரே வணிகப்பெயரின் கீழ் உற்பத்தி செய்கின்ற அனைத்து தொழிற்சாலைகளும் அனுமதிப்பத்திர தேவைகளை இணங்கியொழுகாவிட்டால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது.

குறியீட்டைத் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறுதல்

சான்றுப்படுத்தல் குறியீட்டில் பொறிக்கப்பட்டுள்ளவற்றை தவறாகப் பயன்படுத்துதல் இலங்கை தரப்படுத்தல் நிறுவக சட்டத்தின் கீழ் குற்றமாகும். அத்தகைய குற்றங்களுக்கு சட்டம் அபராதத்தை மற்றும்/அல்லது இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனையைக் குறிப்பிடுகிறது. மேலும் வியாபார பொருள் அல்லது உற்பத்தி தரத்தில் குறைவாக இருந்தால் அல்லது அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர் எந்த நிபந்தனையின் கீழ் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதோ அந்த நிபந்தனைகளையும் நியதிகளையும் இணங்கியொழுகத் தவறினால் அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்படும்.

வருடாந்த கட்டணம்

This page is under construction