govlk

எஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - வெளிநாடு

வெளிநாடுகளில் தயாரிக்கப்படுகின்ற உற்பத்திகளுக்கான SLS குறியீடுகளை வழங்கும் நடைமுறை

விண்ணப்பம்

விண்ணப்பதாரர் விண்ணப்ப கட்டணத்துடன் குறிப்பிடப்பட்ட படிவத்தில் இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்திற்கு (SLSI) விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்கின்ற விண்ணப்பதாரர் இலங்கைக்கு வெளியில் உள்ள தயாரிப்பாளராக இருக்க வேண்டும். இலங்கை தரப்படுத்தல் நிறுவக (SLSI) சட்டம் மற்றும் நியதிகள் மற்றும் ஒழுங்குவிதிகள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் விண்ணப்பதாரர் ஏற்றுக்கொண்டு நிறைவேற்ற வேண்டும்.

விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்:

  • தர உறுதிப்படுத்தல் முறைமைக்கு உதவுவதற்குத் தேவைப்படும் ஆவணங்கள் (உதா: தர கையேட்டின் பிரதி, தர உறுதிப்படுத்தும் திட்ட வரைபு பரிசோதனை மாதிரிப் படிவங்கள் போன்றவை)
  • தயாரிப்பு நடைமுறை (உதா: நடவடிக்கைமுறையின் வரைபட பிரதிநிதித்துவம், பாய்வு வரைபடம் போன்றவை)
  • பரிசோதனை ஒழுங்குபடுத்தல் பற்றிய விபரங்கள் மற்றும் தொடரிலக்கமிடப்பட்ட சான்றிதழ்.
  • இலங்கை தரத்திற்கு உற்பத்தி உறுதிப்படுத்தப்படுவதைக் குறிக்கும் சுயாதீன ஆய்வுகூடத்திலிருந்து (உறுதிப்படுத்தப்பட்ட ஆய்வுசாலைகள்) பெறப்பட்ட பரிசோதனை சான்றிதழ் மற்றும் ஏனைய சான்றுப்படுத்தல் பற்றிய விபரங்கள் (உற்பத்தி அல்லது முறைமை)
  • விண்ணப்ப படிவத்திற்கான கட்டணம் USD 25.00 அல்லது அதற்கு சமமானது.
சான்றுப்படுத்தலுக்கு முந்திய பரிசோதனை
  • சான்றுப்படுத்தலுக்கு முந்திய பரிசோதனையொன்று தயாரிப்பாளரின் கட்டிடத் தொகுதியில் மேற்கொள்ளப்படும். இந்த சான்றுப்படுத்தலுக்கு முந்திய மதிப்பீடு இலங்கை தரப்படுத்தல்  நிறுவகத்தினால் (SLSI), ஏற்றுமதிசெய்யப்படும் நாட்டின் தேசிய தரப்படுத்தல் நிறுவனத்தினால் அல்லது இலங்கை தரப்படுத்தல்  நிறுவகத்தினால் (SLSI) தத்துவமளிக்கப்பட்டுள்ள வேறேதேனும் முகவர் நிலையத்தினால் மேற்கொள்ளப்படும். எவ்வாறாயினும் தயாரிப்பாளருக்கு நன்றாக ஸ்தாபிக்கப்பட்ட தர முறைமை இருப்பதற்கு போதியளவு சான்றுகள் இருந்தால், இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்தின் (SLSI) தற்றுணிபின்படி சான்றுப்படுத்தலுக்கு முந்திய மதிப்பீடு நீக்கப்படும்.
  • விண்ணப்பதாரர் தேசிய தரப்படுத்தல் நிறுவகத்தின் அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவகத்தின் சான்றுப்படுத்தலை வைத்திருந்தால் இலங்கை தரப்படுத்தல்(SLSI) நிறுவகத்தின் தற்றுணிபின்படி சான்றுப்படுத்தலுக்கு முந்திய மதிப்பீடு நீக்கப்படலாம்.
  • விண்ணப்பத்தைக் கையாளும் கட்டணம் USD 150.00 (அல்லது அதற்கு சமமான தொகையாகும்) அத்துடன் மதிப்பீட்டுக்காக வருகின்ற பரிசோதகரின்/களின் பிரயாண செலவுகள் இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்தின் (SLSI) ஒழுங்குவிதிகளுக்கு அமைவான கொடுப்பனவை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும்.
  • சான்றுப்படுத்தலுக்கு முந்திய மதிப்பீடு இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்தின் (SLSI) முகவரால் மேற்கொள்ளப்பட்டால் கட்டணம் நேரடியாக கம்பெனிக்கும் முகவருக்குமிடையில் ஒழுங்குசெய்யப்படும்.
  • இறுதி மதிப்பீடு இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்தின் (SLSI) ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டல் மீது இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்தின் (SLSI) பரிசோதகர் குழுவினால் மேற்கொள்ளப்படும். இந்த விஜயத்திற்கான செலவை விண்ணப்பதாரர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அனுமதிப்பத்திரம் வழங்கல்
  • அந்த உற்பத்தி இலங்கை தரத்தில் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை தரப்படுத்தல்SLSI நிறுவகத்தினால் அல்லது ஏற்றுமதி கம்பெனியின் தேசிய தர நிறுவகத்தினால் அல்லது இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்தினால் (SLSI) நியமிக்கப்பட்ட ஏனைய தத்துவமளிக்கப்பட்ட பரிசோதகர் முகவர் நிலையத்தினால் உற்பத்தியின் மாதிரிகள் பெறப்படும். மாதிரியை/களை பரிசோதிக்கும் செலவை விண்ணப்பதாரர் ஏற்றுக்கொள்ள வேண்டும். உற்பத்தி இலங்கையில் அல்லது விண்ணப்பதாரரின் நாட்டில் பரிசோதிக்கப்படலாம். இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்தின் (SLSI) தற்றுணிபின்படி ஆய்வுகூடம் தெரிவுசெய்யப்படும்.
  • இரண்டு தொடர்ச்சியான மாதிரிகள் இலங்கையின் குறிப்பிட்ட தர தேவைகளை இணங்கியொழுகினால் மற்றும் ISO 9001/2000 தர முகாமைத்துவ முறைமையுடன் இணங்கியொழுகினால் தயாரிப்பாளருக்கு SLS சான்றுப்படுத்தல் குறியீட்டைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும்.
  • அனுமதிப்பத்திரம் மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும்.
தர மதிப்பீடு
  • அந்த உற்பத்தி இலங்கை தரத்தில் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்தினால் (SLSI) அல்லது ஏற்றுமதி கம்பெனியின் தேசிய தர நிறுவகத்தினால் அல்லது இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்தினால் (SLSI) நியமிக்கப்பட்ட ஏனைய தத்துவமளிக்கப்பட்ட பரிசோதகர் முகவர் நிலையத்தினால் உற்பத்தியின் மாதிரி/கள் பெறப்படும். மாதிரியை/களை பரிசோதிக்கும் செலவை விண்ணப்பதாரர் ஏற்றுக்கொள்ள வேண்டும். உற்பத்தி இலங்கையில் அல்லது விண்ணப்பதாரரின் நாட்டில் பரிசோதிக்கப்படலாம். இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்தின் (SLSI) தற்றுணிபின்படி ஆய்வுகூடம் தெரிவுசெய்யப்படும்
  • பரிசோதனை இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்தினால் (SLSI) மேற்கொள்ளப்பட்டால், தேவைப்பட்டால் இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்தின் (SLSI) விசாரணை உத்தியோகத்தர்களுக்கு இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்தின் (SLSI) ஒழுங்குவிதிகளுக்கு ஏற்புடைய பிரயாண செலவுகள், தங்குமிட செலவுகள் என்பவற்றை பொருட் தயாரிப்பாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • நுண்ணாய்வு பரிசோதனைக்கு மாதிரி/கள் கொண்டுவரப்படும். பரிசோதனை பொருட் தயாரிப்பாளரின் ஆய்வுகூடத்தில் அல்லது ஏதேனும் சுயாதீன பரிசோதனை ஆய்வுகூடத்தில் செய்யப்பட வேண்டும். அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர் பரிசோதனை செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிசோதனை அறிக்கை இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்திற்கு (SLSI) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • அனுமதிப்பத்திரம் வலுவில் இருக்கும்போது சந்தை மாதிரிகள் பெறப்படும். இலங்கையில் பெறப்படும் சந்தை மாதிரிகளை பரிசோதிக்கும் செலவை இலங்கை தரப்படுத்தல் நிறுவகம் (SLSI) ஏற்றுக்கொள்ளும்.
அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல்

அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர் அந்த அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் திகதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் USD 150.00 (அல்லது அதற்கு சமமான தொகை) புதுப்பித்தல் கட்டணத்துடன் இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்திற்கு (SLSI) அறிவிக்க வேண்டும். அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவரின் செயலாற்றுகையை மதிப்பீடு செய்வதன் அடிப்படையில் அனுமதிப்பத்திரம் அடுத்து மூன்று வருடங்களுக்கு புதுப்பிக்கப்படும்.

இலங்கை தரப்படுத்தல் (SLSI) நிறுவகத்துடன் உடன்படிக்கை

அனுமதிப்பத்திரத்தின் செயற்பாட்டுக்கான நிபந்தனைகளுக்கும் நியதிகளுக்கும் இலங்கை தரப்படுத்தல் (SLSI) நிறுவகத்துடன் விண்ணப்பதாரர் ஓர் உடன்படிக்கையை செய்துகொள்ள வேண்டும்.

கவனிக்கவும்: இலங்கை தரப்படுத்தல் (SLSI) நிறுவகத்திற்கிடையிலான உடன்படிக்கையில், தண்டனைகள், தரமான வழியில் தரச்சின்ன பாவனை மற்றும் தாமாக மீளப்பெறுதல் அல்லது அனுமதிப்பத்திரத்தை இரத்துச்செய்தல் என்பவற்றைக் குறிக்கும் வாசகம் சேர்க்கப்பட்டிருக்கும்.

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை (BDW) பதிவுசெய்வதற்கு சுகாதார அமைச்சிற்காக (MOH) பரிந்துரை

சுகாதார அமைச்சும் இலங்கை தரப்படுத்தல் நிறுவகமும் (SLSI) செய்துகொண்ட உடன்படிக்கையின் கீழ், போத்தலில் அடைக்கப்பட்ட குடி நீரைப் பதிவுசெய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு பரிசோதனைசெய்து சுகாதார அமைச்சிற்கு (MOH) பரிந்துரைசெய்யும் பரிசோதனை நிறுவகமாக இலங்கை தரப்படுத்தல் நிறுவகம் (SLSI) திகழ்கிறது.

தர குறியீட்டை உபயோகிக்க அங்கீகாரம் அளிப்பதற்கு முன்னர் மதிப்பீடுசெய்தல்

விண்ணப்பம் கிடைத்தவுடன் விண்ணப்பத்தில் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக்கொண்டு தர உறுதிப்பாட்டுக்கான பொருட் தயாரிப்பாளரின் ஒழுங்குபடுத்தல்கள் போதுமானதா என்பதை நிறுவகம் மதிப்பீடுசெய்யும். விண்ணப்பதாரர் ஏற்றுக்கொண்டுள்ள தர முகாமைத்துவ முறைமையை சரிபார்ப்பதற்கும் பரிசோதிப்பதற்கும் தொழிற்சாலையில் பரிசோதனை/கள் ஒழுங்குசெய்யப்படுகிறது. உற்பத்தி கட்டுப்பாடு, உபகரணங்களின் பொருத்தமான தன்மை, சோதனையிடும் மற்றும் சோதிக்கும் வசதிகள், பயிற்சி, பதிவேடுகளைப் பேணுதல், அத்தியாவசிய வளங்களின் ஏற்பாடு போன்றவற்றிற்கு கவனம் செலுத்தப்படும்.

நீரியல் புவியியல் அறிக்கை மற்றும் அதன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட, பொருத்தமான நீர் வளம், பரிமாண பாதுகாப்பு, போத்தலில் அடைக்கப்பட்ட நீருக்கான நடவடிக்கைமுறை கோவையை இணங்கியொழுகுதல் மற்றும் தொடர்ச்சியான இரண்டு நீர் மூலங்களின் மாதிரிகளின் உறுதிப்பாடு மற்றும் தகுந்த தரங்களக்கான இறுதி உற்பத்தி என்பவை உறுதிப்படுத்தப்படுதல் என்பவற்றின் மீது குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தப்படும்.

அனுமதிப்பத்திரம் வழங்குதல்

அந்த தேவைகளை திருப்திகரமாக நிறைவேற்றுவதன் அடிப்படையில் ஓரு வருடத்திற்கான சுகாதார அமைச்சுப் பதிவு பரிந்துரைக்கப்படுகின்றது. அத்துடன் மாதிரி திட்டத்திற்கு அமைவாக தொடர்ச்சியான பரிசோதனைமூலம் தொடர்ச்சியான தரத்தை உறுதிப்படுத்திக்கொண்டதன் பின்னர் முழுமையான பதிவு பரிந்துரைக்கப்படுகின்றது.

பதிவின் செல்லுபடியான காலம்

சுகாதார அமைச்சின் (MOH) வேண்டுகோளுக்கிணங்க புதுப்பித்தலுக்கான பரிசோதனை ஒழுங்குசெய்யப்படுகின்றது.

குறிப்புகள்
  • உற்பத்திக்கு ஓர் இலங்கை தர விபரக்கூற்று இருக்க வேண்டும்.
  • தயாரிப்பாளரும் வணிகப் பெயர் உரிமையாளரும் சட்ட உட்பொருளாக இருக்க வேண்டும்.
  • வணிகப்பெயர் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தில் உற்பத்தி/வணிகப்பெயர் மற்றும் தயாரிக்கப்படும் அமைவிடம் இருக்க வேண்டும்.
  • கடல்கடந்த தயாரிப்பாளர்கள் ISO 9001 பிரகாரம் சான்றுப்படுத்தப்பட்டிருப்பது முதன்மைத் தேவையாக இருக்கின்றது.
  • தகுந்தமுறையில் உற்பத்தி குறிப்பிடத்தக்க முதன்மைத் தேவையை நிறைவுசெய்திருக்க வேண்டும்.
  • உற்பத்தியின் குறிப்பிடத்தக்க முதன்மை தேவை.
    • சிமெந்து
      • (அ) கம்பெனி SLS 107:2008இல் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளுக்கு அமைவாக உற்பத்தியைப் பரிசோதிப்பதற்கு வசதிகளைக்கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக சீமெந்தியின் வலுச் சக்தியை மதிப்பிட ISO 679 பிரகாரம் பரிசோதனை வசதிகள் இருக்க வேண்டும்.
        • முழு பரிசோதனை நடவடிக்கைமுறையிலும் வெப்பநிலை 27 + 20C இருக்க வேண்டும்.
        • ஆகக்குறைந்த சம்பந்தப்பட்ட ஈரப்பதன் கீழே தரப்பட்டுள்ள அட்வணைப்படி இருக்க வேண்டும்.

அமைவிடம்

ஆகக்குறைந்த தொடர்புடைய ஈரப்பதன் %

கலக்கும் அறை

65

ஈரப்பதனிடும் அறை

90

அழுத்த வலு பரிசோதனை அறை

50

  • (ஆ) ஒரேவிதமான பரிசோதனைமுறைக்காக தத்துவமளிக்கப்பட்ட ஒரு ஆய்வுகூடத்தில் SLS 107 பிரகாரம் ஒவ்வொரு தொகுதியையும் பரிசோதிக்கும் நிலை இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போது, இது தொடர்பில் பின்வருவனவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

  • மேலே அ) பிரகாரம் தயாரிப்பாளரால் பிரகடனப்படுத்தப்படல்.
  • மேலே ஆ) பிரகாரம் தத்துவமளிக்கப்பட்ட ஆய்வுகூடத்தின் பெயர், முகவரி மற்றும் ஆய்வுகூடத்திற்கு மாதிரியை விநியோகிப்பதற்கு எடுத்துக்கொண்ட சராசரி நேரம் (போக்குவரத்து முறையைக் குறிப்பிட்டு) என்பவற்றைக் குறிப்பிட்டு விண்ணப்பத்துடன் ஒரு கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு கப்பற் சரக்குக்கும் அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும் சாத்தியம்பற்றி இலங்கை தரப்படுத்தல் நிறுவகம் மதிப்பீடுசெய்யும்.
    • CFL மின்குமிழ்கள்: எரியும் ஆயுட்காலத்தை பரிசோதிப்பதற்கான தத்துவமளிக்கப்பட்ட ஆய்வுகூட பரிசோதனை அறிக்கை கிடைக்க வேண்டும்.
  • இரண்டு தொடர்ச்சியான மாதிரிகள் குறிப்பிட்ட இலங்கை தரத் தேவைகளை உறுதிப்படுத்துவதையும் திட்டத்தின் தேவகளுக்கு அமைவாக தர முகாமைத்துவ முறைமை திருப்திகரமாக ஸ்தாபிக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு, அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதையும்பற்றி ஒரு விண்ணப்பதாரர் திருப்திப்படுத்த வேண்டும். (உறுதிப்படுத்துவதற்கு வகைகள்/தயாரிக்கபட்ட பல்வேறு வகைகள் என்பவற்றின் பிரகாரம் மாதிரிகளின் எண்ணிக்கை வேறுபடலாம்)