govlk

மேலோட்டம்

இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) இலங்கையின் தேசிய தரப்படுத்தல் நிறுவனமாகும். இது 1964ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க இலங்கை தரப்படுத்தல் பணியக சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 1984ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க இலங்கை தரப்படுத்தல் நிறுவக சட்டத்தினால் அகற்றப்பட்டு பதலீடுசெய்யும் வரைக்கும் இந்த நிறுவகம் இலங்கை தரப்படுத்தல் பணியகம் என்ற பெயரில் இயங்கியது. இந்த நிறுவகம் தற்பொழுது கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் கீழ் இயங்குகின்றது. அத்துடன் மேற்குறிப்பிடப்பட்ட சட்டத்தின் நியதிகளின் கீழ் அமைச்சரால் நியமிக்கப்பட்ட ஒரு சபையினால் நிர்வகிக்கப்படுகிறது.

இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) இலங்கையில் தேசிய தரப்படுத்தல் நிறுவனமாக ஒழுங்குமுறையாக செயற்படுகின்ற அதேவேளையில் அது ஜெனீவாவில் தலைமை நிலையம் அமைந்துள்ள சர்வதேச தரப்படுத்தல் அமைப்பின் (ISO) அங்கத்தவராக இருக்கின்றது. சர்வதேச தரப்படுத்தல் அமைப்பின் (ISO) அங்கத்தவர் என்றவகையில், தேசிய நிறுவனங்கள் அவர்களின் தேசிய தரங்களின் பிரதிகளை பரஸ்பரம் கொடுக்கும் வாங்கும் அடிப்படையில் பரிமாறிக்கொள்கின்றன. அத்துடன் தேசிய மட்டத்தில் தரங்கள், தொழில்நுட்ப ஒழுங்குவிதிகள் மற்றும் தரங்களுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட தகவல்களை சமூகத்திற்குப் பரப்பும் பொறுப்பையும் வகிக்கிறது.

தொலைநோக்கு

பொருளாதாரத்தின் அனைத்து துறைகளின் தர மேம்படுத்தலுக்கும் தரப்படுத்தல் ஊடாக நாட்டின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தலைமை வகிக்கின்ற முதன்மை தேசிய நிறுவனமாக இருத்தல். இந்த நிறுவனம் அதிசிறந்த தன்மைக்கு முன்மாதிரியாகத் திகழ்வதோடு அதன் ஊழியர்களோடு சேர்த்து சேவைகளைப் பெறுகின்ற பயனாளிகளின் அபிலாஷைகளை நிறைவுசெய்து சுய செயலூக்கமுள்ள கலாசார அமைப்பாகவும் இருக்கிறது.

செயற்பணி

தேசிய பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் தரப்படுத்தலை உறுதிப்படுத்துதல் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளைப் பொறுப்பேற்றல், மேம்படுத்தல் மற்றும் தரப்படுத்தலை வசதிப்படுத்தல், எடை அளவீடு என்பவற்றில் தரத்தை மேம்படுத்துதல். இதை அடைவதற்கு,

  • தேசிய பொருளாதாரத்தின் அனைத்து துறைகளுடன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேம்படுத்துதல்.
  • உற்பத்தி திறனை அதிகரித்தல் மற்றும் வளங்களைப் பயன்படுத்துவதை அதிகரித்தல்.
  • உள்ளக மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு வசதிப்படுத்தல்.
  • சமூக- பொருளாதார அபிவிருத்தியை அடைதல்.
  • உற்பத்திகள் மற்றும் சேவைகள் என்பவற்றின் சர்வதேச போட்டித்தன்மையை மேம்படுத்துதல்.
  • நிறுவனத்தின் ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்ற அதேவேளையில் நுகர்வோரின் விருப்பங்களையும் பாதுகாத்தல்.

உபாயமுறைகள்

  • தேசிய பொருளாதாரத்தின் அபிவிருத்திக்குத் தேவைப்படுகின்ற தேசிய தரங்களை உருவாக்குதல்.
  • அனைத்து பொருளாதார செயற்பாடுகள் மற்றும் சமூக நடவடிக்கைகள் என்பவற்றில் தேசிய தரங்களைப் பயன்படுத்துவதையும் ஈடுபடுத்துவதையும் மேம்படுத்துதல்.
  • பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் தர உறுதிப்பாட்டை மேம்படுத்துதல்.
  • தேசியமட்டத்தில் செல்லுபடியான எடை அளவீட்டு நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் பரப்புதல்.
  • நுகர்வோர் கல்வியையும் பாதுகாப்பையும் அளித்தல்.
  • தரப்படுத்தல் உத்திகள், நடைமுறைகள், எண்ணக்கருக்கள் மற்றும் தர முகாமைத்துவம் ஆகிய விடயங்களில் கைத்தொழில் மற்றும் சேவைகள் ஆளணியினருக்கு கல்வியும் பயிற்சியும் அளித்தல்.
  • சோதனை வசதிகளை அளித்தல் மற்றும் தேசிய சோதனை ஆளுமையை விருத்திசெய்தல்.
  • தரங்கள், தொழில்நுட்ப ஒழுங்குவிதிகள் மற்றும் அவற்றுடன் தொடர்புபட்ட வெளியீடுகள்பற்றிய தகவல் சேவைகளையும் ஆவணப்படுத்தல்களையும் வழங்குதல்.
  • தேசிய தேவைகளைப் பாதுகாப்பதற்காக சர்வதேச மற்றும் பிராந்திய தரப்படுத்தல் நடவடிக்கைகளில் பங்கேற்றல்.
  • நிறுவனத்தையும் அதன் வளங்களையும் தொடர்ச்சியாக விருத்திசெய்தல் மற்றும் தரமுயர்த்துதல்.