Sinhala (Sri Lanka)English (United Kingdom)

image image image
ஆய்வுகூட சேவைகள்
பயிற்சி
அளவியல்
ஆய்வுகூட சேவைகள் இலங்கை நியமங்கள் நிறுவனத்தின் ஆய்வுகூடச் சேவைப் பிரிவானது ஆறு ஆய்வுகூடங்களைக் கொண்டுள்ளன. அவையாவன இரசாயன, இலத்திரனியல், உணவு, பண்டங்கள், நுண்ணுயிரியல், ஆடை என்பனவாகும். Read the Full Story
பயிற்சி நல்ல தரமுடைய  உற்பத்திகளையும் சேவைகளையும் உருவாக்க வேண்டியதை அடிப்படையாகக் கொண்டு அறிவைப் பரப்பும் நோக்குடன் கைத்தொழில் ஆட்களுக்காக நியமப்படுத்தல் மற்றும் தர முகாமைத்துவம் SLSI மீதான பயிற்சிகளை வழங்குகிறது. SLSI பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களானவை நியமப்படுத்தல், தர முகாமைத்துவம், ISO 9000தர முகாமைத்துவ முறைமை, ISO 14000 சூழல் முகாமைத்துவ முறைமை, மற்றும் ஏனைய தரம் தொடர்புடைய களங்களில் எல்லா கைத்தொழில் ஆட்களுக்குமான எல்லாத் தரங்கள், உயர் முகாமைத்துவம் இடை முகாமைத்துவம், நிறைவேற்றுனர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், கடைத்தள பணியாளர்கள் எல்லோருக்குமான பயிற்சிகளை உள்ளடக்கியுள்ளது.   Read the Full Story
அளவியல் அளவீட்டின் விஞ்ஞானமும்தொழில்நுட்பமுமே அளவியல் ஆகும். இதன் அறிவானது பெருமளவு அளவீடுகளில் தங்கியுள்ளது. அளவீட்டு உபகரணங்களிலே அறிவு தங்கியிருப்பதோடான விஞ்ஞானத்தோடு மாத்திரமல்லாமல், பொறியியல், மருத்துவம் போன்ற அநேகமான எல்லா மனித முயற்சியின் கிளைகளிலும் இது பணியாற்றுகிறது. உண்மையில் ஒரு தரத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒருவர் அதனை அளவிட வேண்டும். பிரயோகத்தின் இயல்பு எதுவாக இருப்பினும் புத்திக்கூர்மையான தெரிவு மற்றும் பயன்படுத்துகையானது செய்ய வேண்டிய பொருத்தமான உபகரணத்தின் செயற்பாடு மற்றும் அவை கிடைக்கக்கூடியவைகளிலே பரந்த அறிவானது தங்கியுள்ளது. எல்லா கைத்தொழில்களிலும் அளவு, அளவீட்டுத் திறன்களை முன்னேற்றுவதற்கான பரிசோதிப்பு ஆய்வுகூடங்கள் என்பன தேவையாக உள்ளன. நவீன சமூகத்தில்  மிகச் சரியானவற்றிலும் நம்பத்தகுந்த அளவீட்டு விளைவுகளிலும் நம்பியிருப்பது அதிகமாக உள்ளது. இந்த பரந்த வீச்சிலான அளவீட்டு இயலுமைகளின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்காக அபிவிருத்தியடைந்த நாடுகள் கடுமையான தேசிய அளவீட்டு முறைமைகளைப் பேணுகின்றன. அளவீடுகளின் விளைவுகளைப் பெற்றுக்கொள்ளும் கருத்துநிலையானது அளவீட்டு தேசிய முறையின் கட்டமைப்பின் மையமாக உள்ளதுடன், அளவீட்டு விளைவுகளானவை தேசிய மற்றும் சர்வதேச அளவீட்டு நியமங்களுடன் தொடர்புடைய பெறக்கூடிய அளவீட்டு பரிணாமங்களை கொண்டுள்ளன. இன்றைய போட்டிமிக்க கேள்வியுள்ள சந்தையிலே நல் உற்பத்தி வடிவமைப்பும், வினைத்திறனுள்ள உற்பத்தியும் நம்பத்தகுந்த அளவீடுகளாலும் பரீட்சிப்பு விளைவுகளாலும்ஆதரவளிக்கப்பட வேண்டியனவாக உள்ளன. கொள்வனவு செய்வோரும், நுகர்வோரும் தரம் செயற்பாடு மற்றும் பொருட்களின் நம்பகத்தன்மை என்பவை போன்ற தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை கேள்வியெழுப்புகின்றன. ஆகவே உற்பத்திக் கைத்தொழிலானது அளவீட்டு விளைவுகளின் உலகச் சந்தையிலே உற்பத்திப் பொருட்களையும், சேவைகளையும் போட்டியிடச் செய்வதற்கு வழிவகுக்கும் அளவீட்டு விளைவுகளின் நம்பகத்தன்மையை முன்னேற்றுவதற்கான எண்ணங்களையும், பழக்கங்களையும் கைக்கொள்வது முக்கியமாகிறது. இதனைப் நன்கு அமைக்கப்பட்ட தேசிய அளவீட்டு முறைமையூடாகவே சாதித்துக்கொள்ள முடியும். இந்த தேசிய அளவீட்டு முறைமையானது தேசியத்தின் நன்மைக்கான சரியான மற்றும் பெறக்கூடிய அளவீடுகளுக்கு ஏற்றமுறையில் வர்த்தகத்தை இயலச் செய்வதிலும் நல்ல அளவீட்டு பழக்கங்களைத் தூண்டுவதையும் பொறுப்பாகக் கொண்டுள்ளது. இதனை அளவீட்டு உட்கட்டமைப்பையும், இலங்கையின் நிலையை சர்வதேச ரீதியில் பிரதிநிதித்துவப்படுத்தும் அளவீட்டு உட்கட்டமைப்பை மீறுவதன் ஊடாகவே வழங்க முடியும். நல் அளவீட்டு முறைமைகள் முன்னேறிய வர்த்தகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, ஒரு ஆரோக்கியமான சூழல் மற்றும் மிகவும் வினைத்திறனான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஊடாக நல் வாழ்க்கைத் தரத்தைக்கொண்டு வருகின்றன. உள்நாட்டிலும் ஏற்றுமதியிலும் வியாபாரத்தின் போட்டித்தன்மையையும் முன்னேற்றுகிறது. இலங்கை நியமங்கள் நிறுவனத்தின் உலகளாவிய பிரிவானது ISO 17025 அங்கீகாரத்தை இயந்திரவியல் மற்றும் உஷ்ண அளவீட்டுக்காக பெற்று வைத்திருக்கிறது. இவ் அங்கீகாரமானது ஆய்வுகூடங்களைத் தெரிவு செய்யும்பொழுது தகவலைப் பெற்றுக்கொண்டு தீர்மானத்தை எடுக்க மக்களை அனுமதிக்கிறது, ஏனெனில் இது தகமையுடமை, நடுநிலைமை மற்றும் இயலுமைகளை எடுத்து விளக்குகிறது. ஒரு அங்கீகாரம் பெற்ற அளவீட்டு ஆய்வுகூடம் என்ற வகையில் இலங்கை நியமங்கள் நிறுவனத்தின் அளவியல் பிரிவானது எமதுதேசிய அளவீட்டு முறையிலேயே ஒரு பெரிய பங்கை ஆற்றுகிறது. Read the Full Storyஇலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) 1964 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க கட்டளைகள் பணியக சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இலங்கையின் தேசிய கட்டளைகள் அமைப்பாகும். 1984 ஆம் ஆண்டு 6 ஆம்இலக்க இலங்கை கட்டளைகள் நிறுவன சட்டம் கொண்டு வரப்பட்டு முன்னைய சட்டம் இல்லாது செய்யப்படும் வரைக்கும் இலங்கை கட்டளைகள் பணியகத்தின் பெயரின் கீழேயே இந் நிறுவனம் தொழிற்பட்டது. தற்போது இந் நிறுவனமானது தொழில்நுட்ப மற்றும் ஆய்வுகள் அமைச்சின் கீழே தொழிற்படுவதுடன் மேற்படி சட்டத்தின் பிரகாரம் அமைச்சரால் நியமிக்கப்பட்ட சபையினாலே ஆழப்படுகிறது.

 

செய்திகளும் நிகழ்ச்சிகளும்

  • 1
  • 2
  • 3
தேயிலைக்கான உற்பத்தி சான்றுப்படுத்தல்திட்டம் தேயிலைக்கான உற்பத்தி சான்றுப்படுத்தல்திட்டம் இலங்கை நியமங்கள் நிறுவனமானது இலங்கை தேயிலைச் சபையுடன் இணைந்து தேயிலையின் உற்பத்திச் செயன்முறை மற்றும் இறுதி உற்பத்தியை சான்றுப்படுத்துவதற்... Read more
Appreciation of service - Mr T. Kandasamy Appreciation of service - Mr T. Kandasamy This content is only available in English  From 1964 Mr T. Kandasamy has served in various Technical Committees of SLSI, and shared his kno... Read more
Diploma in food quality management - 2015 This content is only available in English    Diploma in food quality management - 2015       Read more

© 2011 இலங்கை கட்டளைகள் திணைக்களம் முழுப் பதிப்புரிமையுடையது
17 விக்டோரியா இடம், எல்விடிகள பாதை, கொழும்பு 08.


மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது