Sinhala (Sri Lanka)English (United Kingdom)

அறிமுகம்

தர முகாமைத்துவம் மற்றும் தர சாதிப்பில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிப்பதற்கான வருடாந்த விருதாக இலங்கை தேசிய தரவிருது உள்ளது. தர விருது நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை நியமங்கள் நிறுவனத்தால் சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவித்தல்  பிரவினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.


மதிப்பீட்டு அளவுகோல்

விருது விண்ணப்ப நிறுவனங்களானவை ஏழு அளவுகோல்களில் மதிப்பீடு செய்யப்படுகிறது.

 • தலைமைத்துவம்
 • தந்திரோபாயத் திட்டம்
 • வாடிக்கையாளர் கவனக்குவிப்பு
 • அளவீடு, பகுப்பாய்வு மற்றும் அறிவு முகாமைத்துவம்
 • வேலைப்படை கவனக்குவிப்பு
 • செயன்முறை முகாமைத்துவம்
 • விளைவுகள்

அமெரிக்காவிலுள்ள மல்கல்ம் பால்றிஜ் Malcolm Baldrige தேசிய விருதிற்கு பயன்படுத்தப்படும் அளவுகோல்களின் அடிப்படையிலேயே இவ் அளவுகோல்கள் அமைக்கப்படுகிறது.

விருது வகைப்பாடுகள்

இவ் விருதானது பின்வரும் பன்னிரண்டு தகமை வகைப்பாடுகளைக் கொண்டுள்ளன.

 • பெருமளவிலான உற்பத்தி / சேவை/ கல்வி / சுகாதாரக் கவனம்
 • நடுத்தரளவான உற்பத்தி /சேவை / கல்வி / சுகாதாரக் கவனம்
 • சிறியளவான உற்பத்தி / சேவை  / சுகாதாரக் கவனம்

முழுநேரப் பணியாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பெரிய, இடைத்தர, சிறிய அளவுகள் தீர்மானிக்கப்படுகின்றன.

 • பெரியது – 250 க்கு மேற்பட்ட முழுநேரப் பணியாட்கள்
 • இடைத்தர – 50 – 250 வரையான முழுநேரப் பணியாட்கள்
 • சிறியது  - 50 க்கு குறைந்த முழுநேரப் பணியாட்கள்

விருதுகளின் வகைகள்

 • தேசிய தர விருது
 • பேறு விருது
 • பாராட்டு விருது

விருது பெறுபவர்கள் தமது விருதினை பகிரங்கப்படுத்தி விளம்பரம் செய்ய முடியும். விருது பெறுவதினைப் பகிரங்கப்படுத்துவதற்கு மேலதிகமாக பெறுபவர்கள் ஏனைய இலங்கை நிறுவனங்களுடன் அவர்களது வெற்றிகரமான தர தந்திரோபாயம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

தகுதிபெறுதல்

விண்ணப்பதிகதிக்கு 03 வருடங்களுக்கு முன்பதாக இலங்கையின் எவ்விடத்திலும் ஏதாவது வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இவ் விருதிற்கு விண்ணப்பிக்க முடியும். இவ் விருதிற்கான தகுதித்தன்மையானது எல்லா நிறுவனங்களுக்கும் முடியுமானவகையில் திறந்து விட நோக்கத்தைக் கொண்டுள்ளது. தகுதித்தன்மை நிபந்தனைகள் மற்றும் வரையறைகளாவன வரைவிலக்கணத்தில் நீதியையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்துவனவாக உள்ளன. உதாரணத்திற்கு அரச தனியாருக்குச் சொந்தமான உள்நாட்டு அல்லது வெளிநாட்டு உரிமையுடைய கூட்டுநிறுவனம் தனியுரிமை பங்காண்மை கம்பனிகளைக் கொண்டிருத்தல் யாரும்விண்ணப்பிக்க முடியும்.

விருதிற்கான பரீட்சிப்பு


விருதிற்கான பரீட்சிப்பானது திறந்த அளவீட்டு அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டது. இவ் அளவுகோல்களுக்கு பதிற்செயற்பாடு காட்டும் முகாமாக ஒவ்வொரு விண்ணப்பதாரியும் கம்பனி முன்னேற்ற செயன்முறை மற்றும் விளைவுகள் தொடர்பான  தகவல் தரவுகளை வழங்கும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள். வழங்கப்படும் தரவுகள் தகவல்களானவை விண்ணப்பதாரியின் அணுகுமுறையானது ஏனைய கம்பனிகளால் பிரதி செய்யப்படவோ கைக்கொள்ளப்படவோ கூடிய என்பது போதியளவு விளக்கம் செய்ய வேண்டும். விருது பரீட்சிப்பானது விருதுகளை வழங்குவதற்கான நம்பகத்தன்மையான அடிப்படையாக செயற்படுவது மாத்திரமல்லாமல் ஒவ்வொரு விண்ணப்பதாரியினதும் ஒட்டுமொத்த தர முகாமைத்துவத்தினை இனங்கண்டு கொண்வதற்கு அனுமதிக்கிறது.

விண்ணப்ப மீள்பார்வை


விண்ணப்பங்களானவை பரிசோதனைச் சபை , மீள்பார்வை சபை மற்றும் ஐந்து கட்ட செயன்முறையின் நடுவர்கள் குழாமினால் மீள்பார்வை செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்படுகிறது.

 • தனிப்பட்ட மதிப்பீடு
 • இணக்க மதிப்பீடு
 • கள விஜய மதிப்பிடு
 • மீள்பார்வைக்குழு சிபார்சு
 • நடுவர்கள் குழாமினால் வெற்றிபெறுவோர் தெரிவு செய்யப்படுவர்

பரீட்சிப்போர் பரிட்சிப்பு சபையிலிருந்து இதற்காக ஒதுக்கப்படுவதுடன் விண்ணப்பதாரியின் வர்த்தகம் மற்றும் பரீட்சார்த்தியின் நிபுணத்துவ இயல்புகளைக் கணக்கில் எடுத்து விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. விருப்பு முரண்பாடுகள் தொடர்பான கடுமையான சட்டங்களின் பிரகாரம் ஒப்படைகள் மேற்கொள்ளப்படுகிறது.


விண்ணப்பதாரியின் பின்னூட்டல்கள்

மீ்ள்பார்வைச் செயன்முறைகளின் முடிவுகள் குறித்த பின்னூட்டல் அறிக்கைகளை எல்லா விண்ணப்பதாரிகளும் பெற்றுக்கொள்கிறார்கள்.இவ்  பின்னூட்டலானது சிறந்த அளவுகோல் செயற்பாட்டின் விண்ணப்பதாரியின் பதிற்செயற்பாட்டை அடிப்படையாக உள்ளது. இவ் அறிக்கையானது முன்னேற்றத்திற்கான பலங்கள் மற்றும் விடயங்களைச் சுட்டிக்காட்டுகிறது, பல விண்ணப்பதாரிகள் பின்னூட்டல் அறிக்கையை கம்பனியின் செயற்பாட்டை முன்னேற்றுவதற்கான வழிகாட்டு ஆவணமாக பயன்படுத்துகின்றனர்.

செய்திகளும் நிகழ்ச்சிகளும்

 • 1
 • 2
New Sri Lanka Standards Catalogue This content is only available in English    The new  Sri Lanka Standards Catalogue has been published and is available for sale at the SL... Read more
National Quality Awards-2015 This content is only available in English    Congratulations to award winners ! National Quality Awards-2015WINNERS Service - Large Cate... Read more

© 2011 இலங்கை கட்டளைகள் திணைக்களம் முழுப் பதிப்புரிமையுடையது
17 விக்டோரியா இடம், எல்விடிகள பாதை, கொழும்பு 08.


மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது