இலங்கை நியமங்கள் நிறுவனத்தின் ஆய்வுகூடச் சேவைப் பிரிவானது ஆறு ஆய்வுகூடங்களைக் கொண்டுள்ளன. அவையாவன இரசாயன, இலத்திரனியல், உணவு, பண்டங்கள், நுண்ணுயிரியல், ஆடை என்பனவாகும். ஆய்வுகூடத்துடன் தொடர்புடைய தொழில்நுட்ப பணியாளர்கள் தமது உரிய விடயப்பரப்புக்களில் விசேடத்துவம் பெற்றவர்களாகவும், உயர்வான தகைமை திறனுடையவர்களாகவும் உள்ளனர்..
ஆய்வுகூடத்தில் கிடைக்கக்கூடியதாக உள்ள நவீன பரீட்சிப்பு வசதிகளானவை பல உற்பத்திகளையும் பண்டங்களையும் தேசிய மற்றும் அல்லது சர்வதேச நியமங்களின்பிரகாரம் பரீட்சிக்க வசதியளிக்கின்றன. ISO/IEC 17025 அடிப்படையிலான ஆய்வுகூட முகாமைத்துவ முறைமையானது ஆய்வுகூடங்களில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இரசாயனம், உணவு, பண்டங்கள் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வுகூடங்களானவை சுவீடன் அங்கீகரிப்புச் சபை (SWEDAC ஆலும் பரீட்சிப்புக்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை இவ் ஆய்வுகூடங்கள் கொண்டுள்ளன. இரசாயனம், உணவு மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வுகூடங்களானவை இலங்கை அங்கீகரிப்புச் சபையின் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன.
இவ்வாறான அங்கீகரிப்பு நிலைகளானவை இவ்ஆய்வுகூடங்களின் நம்பத்தகுந்த மற்றும் தொழில்நுட்ப ரீதியான செல்லுபடியான பரீட்சிப்பு விளைவுகளை உருவாக்கும் தகைமை உடைமையை உருவாக்குகின்றன.
வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011 09:46 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது வியாழக்கிழமை, 06 ஜனவரி 2011 05:48
செய்திகளும் நிகழ்ச்சிகளும்
- 1
- 2





