தகவல் சேவைகள்
எமது நோக்கு
நியமப்படுத்தல் மற்றும் தர முகாமைத்துவம் மீதான வாடிக்கையாளர் முன்னிலைப்படுத்திய ஒரு நிறுத்தல் தகவல் நிலையமாக சிறந்து விளங்குதல்.
இநிநி இன் ஆவணப்படுத்தல் மற்றும் தகவல் பிரிவானது நியமப்படுத்தல் மற்றும் தர முகாமைத்துவம் மீதான இலக்கியங்களுக்கான ஒரு நிறுத்தல் தகவல் நிலையமாக உள்ளது. ஒரு விசேடித்த தகவல் நிலையம் என்ற வகையில் நாம் எமது உறுப்பினர்களுக்கு நியமங்கள் மற்றும் தரமுகாமைத்துவம் மீதான தனித்துவமான வளச் சேகரிப்புக்களை வழங்குகின்றோம். எமது சேகரிப்பில் பெரும்பகுதியானவை தேசிய சர்வதேச, வெளிநாட்டு தேசிய நியமங்கள் மற்றும் தொழில்நுட்ப ஒழுங்குவிதிகள் போன்றவற்றின் இற்றைப்படுத்தப்பட்ட அனைத்தும் அடங்கிய சேகரிப்புக்களைக் கொண்டுள்ளன. நியமங்களுக்கு பணியாற்றுதல் மற்றும் நிறுவனங்களுக்கு சட்டரீதியான மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு உதவுவது மாத்திரமல்லாமல் பாதுகாப்பு மற்றும் காப்புக்களின் பரந்த தாக்கங்களுக்கான தர்க்கரீதியான விஸ்தரிப்பாகவும் செயற்படுகிறது. மேலும் புத்தகங்கள், சஞ்சிகைகள், கைந்நூல்கள் உட்பட்ட அகன்ற வீச்சுடைய விடயங்களையும் பிரதானமாக தரம் மற்றும் நியமப்படுத்தல் மற்றும் அதனுடைய சக துறைகளில் மேலும் உள்ளடக்கிக் கொள்கிறது.
கைத்தொழில், வர்த்தகம், பொதுமக்கள் போன்றோருக்கான சிறிய இடைத்தர அளவு தொழில்முயற்சிகளிலிருந்து வரும் வாடிக்கையாளருக்கான பரந்த அடிப்படையிலான சர்ச்சைக்குரிய தகவற் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்காக பல்வேறுபட்ட சேவைகள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இதனைத் தவிர வழமையான நூலகச் சேவைகளும் கிடைக்கக்கூடியதாக உள்ளது.
இநிநி யின் ஆவணப்படுத்தல் மற்றும் தகவல் பிரிவானது நியமங்கள் மற்றும் தொழில்நுட்ப ஒழுங்குவிதிகள் மீதான WTO/TBT National Enquiry Pointதேசிய விசாரணைப் புள்ளியாக தகுதிநிலைப்படுத்தப்பட்டுள்ளது..
| பின்வரும் முகவரியிலிருந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்: |
ஆவணப்படுத்தல் மற்றும் தகவல் பிரிவு
இலங்கை நியமங்கள் நிறுவனம்
17 விக்ரோறியா பிளேஸ்
எல்விற்றிக்கல மாவத்தை
கொழும்பு 08
தொலைபேசி : + 94 11 2672615
தொலைநகல்: + 94 11 2469749
மின்னஞ்சல்:
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
இணையத்தளம் : http://www.slsi.lk
செய்திகளும் நிகழ்ச்சிகளும்
- 1
- 2





