Sinhala (Sri Lanka)English (United Kingdom)

வரலாறு

1964
ஒரு பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் தேசிய நியமங்கள் அமைப்பாக தொழிற்படுவதற்கும் அதனுடன் தொடர்புடையவோ, தொடர்பற்ற விடயங்களை வழங்குவதற்கும் இலங்கை நியமங்கள் பணியகம் (BCS) அமைக்கப்படுதல்.
1965

தேசிய நியமங்கள் அமைப்பின் செயற்பாடுகள் ஆரம்பிக்க்ப்படுதல் முதற்சபையின் உறுப்பினர்களாக திரு B D ரம்பாலா (தவிசாளர்) மற்றும் திரு R G de S வெற்றிமுனி (பணிப்பாளர்) மற்றும் ஹரிச்சந்திரா விஜயதுங்க முதலாவதும் தனித்தவராகவும் நியமிக்கப்பட்ட பணியாளர் அதனுடைய செயலாளராக தொழிற்பட்டவர். முதற் சபைக் கூட்டமானது கெளரவ கைத்தொழில் அமைச்சரின் தலைமையில் கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்றது. அக்கட்டத்தில் பணியகமானது இலங்கை ஒட்டப்பலகை கூட்டுத்தாபனத்தின் வளாகத்தில் இருந்த அலுவலகத்திலேயே இருந்து இயங்கியது. மின்பொறியியல், இயந்திரவியல் பொறியியல், சிவில் பொறியியல், விவசாயம் மற்றும் இரசாயனப் பொருட்கள் அளவீட்டியல் போன்றனவற்றுக்கான பிரிவுக் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

1966

திருவாளர்கள் G M S டி சில்வா மற்றும் டக்ளஸ் பண்டித நியமங்கள் உருவாக்கல் மீது வேலையைப் பொறுப்பேற்பதற்காக முதல் நியமங்கள் அதிகாரிகளாக ஆட்சேர்ப்பு செய்யப்படுதல். கைத்தொழில் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இந்திய மற்றும் ஏனைய நானாவித நியமங்களின் ஆரம்ப கட்டச் சேகரிப்புடன் நூலகம் ஒன்று கொழும்பு வஜிர வீதி பணியக வளாகத்தில் நிறுவப்படுதல். இவ் நூலகத்தின் அடிப்படை வகிபங்காக இருந்தது நியமங்கள் உருவாக்கலுக்கான ஆதரவுச் சேவைகளை வழங்குதலாகும். தற்போதிருக்கும் சேகரிப்பினை முழுமையாக்குவதற்காக இவ் வேலையை ஒழுங்கு செய்யும் பிரதான இலக்குடன் BCS இல் சேவையாற்ற கைத்தொழில் அமைச்சிலிருந்து  கலாநிதி . R C டி சில்வா இரண்டாம் நிலை வேலை அடிப்படையில் பிரித்தானியர் உயர்ஸ்தானிகர் ஸ்தாபனத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பிரித்தானிய நியமங்களின் ஒரு முற்றுமுழுதான தொகுதியை கொண்டு தற்போதிருக்கும் சேகரிப்பு தொகுதியை பூரணப்படுத்தியமை.

1967
இலங்கையின் முதலாவது நியமங்கள் வெளியீடு, CS: அடிப்படை 1 A5 அளவான கோடுகள் வர்ணம் நியமங்களின் அட்டையாக நரை வர்ணம் தெரிவு செய்யப்படுதல்
1969
நியமனப்படுத்தலுக்கான சர்வதேச நிறுவனம்  (ISO).  ஒரு உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டமை ஏனைய தேசிய நியமங்கள்அமைப்பிலிருந்து தேசிய நியமங்களின் உசாத்துணை சேகரிப்பு ஒன்றினை நிறுவுதல்.
1970
  • BCS மிகவும் இடவசதி வளாகத்திற்கு இலக்கம்.53, தரம்மபால மாவத்தை, கொழும்பு 7 க்கு இடம்மாறியது.

  • ISO ஆலும் BCS ஆலும் முதற்தடவையாக ஒரேமுறையில் கொண்டாடப்பட்ட உலக நியமங்கள் தினத்தினை ஒட்டி BCS இன் உத்தியோகபூர்வ அங்கமாகிய "நியமங்கள் புதியவைகள்" வெளியிடப்பட்டமை.
  • BCS ஆனது ISO வின் செயற்பாடுகளில் பங்குபற்றியமை இரண்டு தொழில்நுட்பக் குழுக்களில் பங்குபற்றும் உறுப்பினராகவும், பத்து தொழில்நுட்பக் குழுக்களில் அவதானிப்பு உறுப்பினராகவும் பங்குபற்றியது.
  • அரசாங்கப் பகுப்பாய்வு திணைக்களம், நகரப் பகுப்பாய்வாளர் ஆய்வுகூடம், மற்றும் விஞ்ஞான மற்றும் கைத்தொழில் ஆராய்ச்சி இலங்கை நிறுவகம் என்பவற்றில் நியமங்கள் உருவாக்கலுக்குத் தேவையான பரிசோதிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
  • தேசிய நியமங்களின் விருத்திக்காக இரசாயனப் பொருட்கள், உணவுகளைப்  பரிசோதிப்பதற்காக தரவு பரீட்சிப்பு வழங்குதல் என்பது அந்நேரத்திற்கு தேவையான ஒன்றாக இருந்ததுடன், அந்நோக்கத்திற்காக BSC யில்உ ள்ள ஒரு ஆய்வுகூடத்தை நிறுவுவதற்காக வக்ஸ்ஹோல்  கொழும்பில் பெரிய செயற்பாடுகளுக்காக ஆய்வுகூடம் நிறுவப்பட்டது. அமைச்சர்கள் தேசிய அளவீட்டல் சபையொன்றை பணியகத்தால் தயாரிக்கப்பட்ட அளவீட்டு அறிக்கையின் சிபார்சுகள் மீது மெற்றிக் முறைக்கு மாற்றுவதற்காக அதனை அமைப்பதற்கான பணிப்புரையை விடுத்திருந்தது. நியமப்படுத்தல், அடையாளம் பொறித்தல், திட்டங்களை ஆளும் ஒழுங்குவிதிகள் சட்டகப்படுத்தப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டன. பாதுகாப்பான சவரக் கத்திகள் மற்றும் அஸ்பெஸ்ரஸ் சீமெந்து கூரைத்தகடுகள் என்பவற்றுக்கான கட்டாய நியமங்கள் உருவாக்கப்பட்டன.
1971

Regulations governing the standardization Marks Scheme were framed and gazetted Standards were made compulsory for Safety Razor Blades and Asbestos Cement Sheets.

1972

தேசிய அளவிடுதல் சபைக்கு BCS ஆனது ஒரு அறிக்கையை சமர்ப்பித்து பெருமையை பகிர்ந்து கொண்டது. சபையானது இலங்கையில் அளவிடுதல் குறித்த அறிக்கையை கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சரக்கு சமர்ப்பித்தபொழுது தேசிய அளவீட்டுச் சபையின் அறிக்கையை BCS சமர்ப்பித்து பெருமையை பகிர்ந்து கொண்டது. இவ் அறிக்கையானது BCSஆல் தயாரிக்கப்பட்டு இறுதிப்படுத்தப்பட்டது பரிசில் இடம்பெற்ற புகையிலை உற்பத்திகள் மீதான
ISO/TC 126 கூட்டத்தில் பணியகம் பங்குபற்றியது.

1973
இடைத்தர முகாமைத்துவ மட்டத்திலுள்ள ஆட்களுக்காக கைத்தொழில் நியமப்படுத்தல் மற்றும் தரப்பட்டுப்பாடுகள் மீதான முதலாவது பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை BCS நடாத்தியது. தரம் நியமப்படுத்தல், புள்ளிவிபர முறைகள் என்பன தொடர்பான தலைப்புக்கள் கலந்துரையாடப்பட்டன. கைத்தொழில் துறையிலிருந்து 20 பங்குபற்றுனர்கள் பங்குபற்றியிருந்தனர்.

 

1974

பல ஏற்றுமதிப் பண்டங்களுக்கு ஏற்றுமதிக்கு முன்பான பரிசோதிப்பு நியமங்கள் பரிசோதிப்பு கட்டாயப்படுத்தப்பட்டு ஏற்றுமதிக்கு முன்பான பரிசோதிப்பு திட்டம் வெளியிட்டு வைக்கப்பட்டது. இவ்வாறு பரிசோதிக்கப்பட்ட ஏற்றுமதிப் பண்டங்களாவன கொக்கா விதைகள், முழு கறுப்பு மிளகுகள், nutmeg மற்றும் mace ஏலம், மற்றும் கராம்பு. இத்திட்டத்தை செயற்படுத்துவதற்கான மத்திய சான்றுப்படுத்தும் அதிகாரசபையாக பணியகம் அங்கீகரிக்கப்பட்டது.

ஏற்றுமதிக்கு முந்திய பரிசோதிப்பு திட்டத்தின் கீழ் கடல்வள உற்பத்திகளையும் பதப்படுத்துவதற்கான நிறுவனங்கள் பதியப்படுதல்.

ISO வின் மத்திய செயலகத்தின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு பணிப்பாளர் கலாநிதி N M சொப்ராவுக்கு
BCS விருந்தளித்தது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் நியமங்களின் வகிபங்கை கலந்துரையாடுவதே அவரின் விஜயத்தின் நோக்கமாக இருந்தது, முடியுமான அளவுக்கு தேசிய நியமங்களையும் ஏனைய கைக்கொள்வதற்கு துடிப்பாக பின்தொடர்வதற்கு தீர்மானிக்க அவரின் விஜயமானது BCS சபைக்கு உதவியது. ஆய்வுகூட சேவைகள் பிரிவின் விஸ்தரிப்புடன் பணியகமானது வெள்ளவத்தையில் மிகவும் இடவசதி வாய்ந்த இடத்திற்கு மாற்றப்பட்டது.

 


சிறிய விவசாய பயிர்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தொடர்பான தரக்கட்டுப்பாட்டு கருத்தரங்கு ஒன்று பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மண்டபத்தில் இடம்பெற்றது.

ஊக்கி உணவுகள் ISO/TC 34 (SS/5) வாசனைத் திரவியங்கள் மற்றும் சுவையூட்டிகள் மீதான உப குழு மீதான இந்தியா, நியுடெல்கி யில் நடைபெற்ற உபகுழுக் கூட்டத்தில் BSC பிரதிநிதித்துவம் செய்தது. பணியகத்தின் சபையானது கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அமைச்சரிடம் BSC இன் பெயரானது இலங்கை நியமங்கள் நிறுவனம் என மாற்றப்பட வேண்டுமென பணியகத்தின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதனை நோக்காகக் கொண்டு சிபார்சு செய்தது. தொழில்நுட்ப மட்டத்திலான கைத்தொழில் நியமப்படுத்தல் மற்றும் தரக்கட்டுப்பாடு மீதான முதலாவது நிகழ்ச்சித்திட்டம்.

1975

பிரதான உற்பத்திகளின் ஏற்றுமதிக்கு முன்னான பரிசோதிப்புத் திட்டத்தின் கீழ் இறால்கள் மற்றும் சிங்கி இறால்களை பதப்படுத்தும் மூன்று நிறுவனங்களின் பதிவு..
ஏலம், கொக்கோ விதைகளைப் பதப்படுத்துவது மீதான பயிற்சிப்பட்டறை.

1976

ஏற்றுமதிக்கு முந்திய கட்டாயப் பரிசோதிப்பு திட்டத்தின் கீழ் Sesame கொண்டுவரப்பட்டது.

1977

செக்ஸ்லோவாக்கியாவில் நடைபெற்ற இறபர், இறப்பர் உற்பத்திகள் மீதான  ISO/TC 45 கூட்டத்தில் பணியகம் பங்குபற்றியது. ISO தகவல் வலைப்பின்னல் (ISONET) மகாநாட்டில் இலங்கை பிரதிநிதித்துவம் செய்தது.

1978

BCS முதற்தடவையாக இரண்டு குழுக் கூட்டங்களை ISO/TC 34 வாசனைத் திரவியங்கள் மற்றும் சுவையூட்டிகள் குறித்தது (SC7)  மற்றும் தேயிலை (SC 8)  சம்பந்தமானது கொழும்பில் நடாத்தியது.

1979

ISO வின் செயலாளர் நாயகம் திரு. Olle Sturen (ஒலே சுரன்)அவர்களை வரவேற்கும் பாக்கியத்தை BCS பெற்றது.

1980

பணியகத்தின் அச்சடிப்பு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அச்சடிப்பு அலகு ஒன்றை நிறுவியதுடன், பகிரங்கப்படுத்தல் செயற்பாடுகள் இந்த அலகின் கீழ் கொண்டுவரப்பட்டன.

1981

அமெரிக்காவின் Underwriter Laboratories இன் அங்கீகாரம் பெற்ற பரிசோதிப்பு மற்றும் மேற்பார்வை முகவராக UL சின்னத்தை பயன்படுத்துவதற்காக பணியக ஆய்வுகூடமானது நியமிக்கப்படுதல்.
ஆய்வுடங்களின் திருத்துகை மற்றும் பேணுகைக்கான பேணுகை அலகை நிறுவுதல்.
நுகர்வோர் அறிவூட்டலுக்கான சஞ்சிகையான “Paribhogika Puwath”  இன் வெளியீடு  SOஆல் அனுசரணை செய்யப்பட்ட நியமப்படுத்தப்படல் மற்றும் தரக்கட்டுப்பாடு மீதான கருத்தரங்கை பணியகம் நடாத்தியது.
ஜப்பானிலிருந்து இரண்டு தர நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழும், ஆசிய உற்பத்தித்திறன் நிறுவனத்தின் உதவியின் கீழும் பணியகமானது ஒரு தேசிய தர ஊக்குவிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டது.
கல்வி மற்றும் பயிற்சி பிரிவு ஒன்றை அமைத்துக்கொண்டு வித்யா மந்திரிய, விஜேராம மாவத்தை, கொழும்பு 7 க்கு நகர்ந்தது.   
கல்வித் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளர்களுக்காக நுகர்வோர் கல்வி மீதான ஒரு பயிற்சிப்பட்டறை ஒன்று நடாத்தப்பட்டது.

1982

தென்கிழக்கு ஆசியாவில் மீன் பதனிடுதல் தரக்கட்டுப்பாட்டின் பிராந்திய அமைப்பாக உள்ள INFOFISH இன் உதவியுடன் ஓடு உடைய மீன் பதப்படுத்துதலில் தரக்கட்டுப்பாடு மீதான முதலாவது பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது.  
கடல் உணவின் தரத்தை உயிரியல் ரீதியாக மதிப்பிடுவது தொடர்பான ஒரு பயிற்சிப்பட்டறையானது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கூட்டுழைப்புடன் நடைபெற்றது.
கைத்தொழிலுக்கான தரக்கட்டுப்பாட்டுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமானது UNIDO/SIDA  மற்றும் Alirati பயிற்சிநிலையம் சுவீடன் என்பவற்றின் கீழ் இடம்பெற்றது.

1983

தென்கிழக்கு ஆசியாவின் மீன்பதனிடுதல் தரக்கட்டுப்பாட்டின் பிராந்திய அமைப்பான INFOFISH இன் உதவியுடன் ஓடு உடைய மீன்களின் தரக்கட்டுப்பாடு மீதான முதலாவது பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது.
கடல் உணவின் தரத்தை உயிரியல் ரீதியாக மதிப்பிடுவது தொடர்பான ஒரு பயிற்சிப்பட்டறையானது
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கூட்டுழைப்புடன் நடைபெற்றது..
கைத்தொழிலுக்கான தரக்கட்டுப்பாட்டுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமானது UNIDO/SIDA  மற்றும் Alirati பயிற்சிநிலையம் சுவீடன் என்பவற்றின் கீழ் இடம்பெற்றது.

1984

1984ஆம் ஆண்டு 06ஆம் இலக்க இலங்கை நியமங்கள் நிறுவனசட்டமானது  1964 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க BCS சட்டத்தை இல்லாது செய்ததுடன், நிறுவனத்தின் செயற்பாட்டு வீச்சையும் வல்லமைகளயும் அகலித்தது.
சர்வதேச கம்பளிச் செயலகத்தினால் (IWS)ஆய்வுகூடத்தின் ஆடைப் பரிசோதிப்பு அலகானது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பரிசோதிப்பு ஆய்வுகூடமாக ஏற்றுக்கொள்ளப்படுதல். (IWS)

1986

தராண்மைப்படுத்தப்பட்ட  இறக்குமதிக் கொள்கையின் கீழ் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இறக்குமதிகளின் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக இறக்குமி பரிசோதிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் உள்ளடக்கப்படும் பண்டங்களாக தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், இறுக்கப்பட்ட பால், பழம், இரசங்கள் /நீரகற்றப்பட்ட பண்டங்கள் /பரிமாறத் தயாரான குடிபானங்கள், ஆழிகள், வெளிச்செலுத்தும் சொருகிகள், மின்விளக்கு இடுக்கிகள், மின்விளக்குகள், மின்அடுப்புகள் என்பன அடங்கின.
இறக்குமதி செய்யப்படும் வளமாக்கிகளுக்கான தரப் பரிசோதிப்பானது தேசியவளமாக்கிகள் செயலகத்தின் வேண்டுகோளின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.

1987

நுகர்வியல் கருத்தியலை பிரபல்யப்படுத்துவதற்காக உயர்தர வர்த்தகப் பிரிவைச் சேர்ந்த ஏறத்தாழ 25,000 மாணவர்களை ஒன்றுசேர்த்து நுகர்வோர் கல்வி வட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுதல். ஒரு பாடசாலைக்கு இடையிலான கையேட்டுப் போட்டி இவ் நுகர்வோர் கல்வி வட்டங்களை இணைத்துக்கொண்டு இடம்பெற்றது.

அளவீட்டுக்கான வசதிகளுடன் ஆய்வுகூடங்களில் அளவீட்டு அலகுகளை நிறுவுவதற்காக SLSI ஆனது கைத்தொழில்துறை நோக்கி தனது சேவைகளை விஸ்தரித்தது.

செய்திகளும் நிகழ்ச்சிகளும்

  • 1
  • 2
New Sri Lanka Standards Catalogue This content is only available in English    The new  Sri Lanka Standards Catalogue has been published and is available for sale at the SL... Read more
National Quality Awards-2015 This content is only available in English    Congratulations to award winners ! National Quality Awards-2015WINNERS Service - Large Cate... Read more

© 2011 இலங்கை கட்டளைகள் திணைக்களம் முழுப் பதிப்புரிமையுடையது
17 விக்டோரியா இடம், எல்விடிகள பாதை, கொழும்பு 08.


மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது