Sinhala (Sri Lanka)English (United Kingdom)

மேலோட்டப் பார்வை

இலங்கை நியமங்கள் நிறுவனம் (SLSI) 1964 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க இலங்கை பணியக சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இலங்கையின் தேசிய நிலையங்களின் அமைப்பாகும். 1984 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க இலங்கை நியமங்கள் நிறுவனச் சட்டம் கொண்டுவரப்பட்டு முன்னைய சட்டம் இல்லாது செய்யப்படும் வரைக்கும் இலங்கை நியமங்கள் பணியகத்தின் பெயரின் கீழேயே இந்நிறுவனம் தொழிற்பட்டது. தற்போது இந்நிறுவனம் ஆனது தொழில்நுட்ப ஆய்வு அமைச்சின் கீழேயே தொழிற்படுவதுடன், மேற்படி சட்டத்தின் பிரகாரம் அமைச்சரால் நியமிக்கப்பட்ட சபையினாலே ஆழப்படுகிறது.

இலங்கை நியமங்கள் நிறுவனமானது இலங்கையின் தேசிய நியமங்களின் அமைப்பாக இருக்கின்றமையால் ஜெனிவாவை தலைமையகமாகக் கொண்டுள்ள நியமங்களுக்கான சர்வதேச நிறுவனத்தின் உறுப்பினராக அது உள்ளது. (ISO) ISO, வின் உறுப்பினர் என்ற வகையில் தேசிய நியமங்கள் அமைப்பானது கொடுத்து வாங்கல் அடிப்படையில் தேசிய நியமங்களை பரிமாறிக்கொள்வதுடன், நியமங்கள் தொடபர்பான தகவல்களையும், தொழில்நுட்ப ஒழுங்குவிதிகளையும் தேசியமட்டத்தில் சமூகத்தின் நியமங்கள் தொடர்பான செயற்பாடுகளையும் பரப்புவதற்கும் பொறுப்பபாக உள்ளது.

நோக்கு

பொருளாதாரத்தின் எல்லா துறைகளினதும் நியமப்படுத்தல் மற்றும் தரம் உயர்த்துதல் ஊடாக தேசத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தலைமைத்துவத்தை வழங்கும் தேசிய முதற்தர நிறுவனமாக உள்ளதுடன், நிறுவனமானது உன்னதரத்தின் மாதிரியாகவும் தனது பயன்பெறுவோருக்கான தனது சேவைகள் பணியாளருக்கான தனது சேவைகளினால் நிறுவனமானது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்துகொண்டு நிறுவனத்திற்கு சுயஊக்கம் அளிப்பது அதி உன்னதர திறமையின் மாதிரியாக உள்ளது.

பணி

தேசிய பொருளாதாரத்தின் எல்லா துறைகளினதும் செயற்பாடுகளோடு தொடர்புடையவர்கள் தர உத்தரவாதம், அளவீடு, நியமப்படுத்தல் என்பனவற்றை பொறுப்பெடுத்து ஊக்குவித்து வசதிப்படுத்துவதற்காகப் பொறுப்பெடுத்தல்.

  • தேசிய பொருளாதாரத்தின் எல்லா துறைகளின் செயற்பாடுகள் தொடர்பாக
  • வளங்கள் பயன்படுத்துகையை உச்சப்படுத்துதற்கும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும்
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தை வசதிப்படுத்துவதற்கு
  • சமூக பொருளாதார அபிவிருத்தியை சாதிப்பதற்கு
  • உற்பத்திகள் சேவைகளின் சர்வதேச போட்டித்தன்மையை உயர்த்துவதற்கு
  • நிறுவனத்தின் பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் அதேவேளையில் நுகர்வோரின் விருப்புக்களைப் பாதுகாத்தல்


தந்திரோபாயங்கள்

  • தேசிய பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கு தேவைப்படும் தேசிய நியமங்களை உருவாக்குதல்.
  • பொருளாதார மற்றும் சமூக செயற்பாடுகளின் எல்லா மட்டங்களிலும் தேசிய நியமங்களைப் பயன்படுத்தி பிரயோகிப்பதை ஊக்குவித்தல்
  • பொருளாதாரத்தின் எல்லாத் துறைகளிலும் தர உறுதிப்பாட்டை ஊக்குவித்தல்.
  • தேசிய மட்டத்தில் செல்லுபடியாகும் அளவீட்டு பழக்கங்களை ஊக்குவித்து பரப்புதல்
  • நுகர்வோர் அறிவூட்டல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பினை வழங்குதல்..
  • நியமப்படுத்துதல் மற்றும் தர முகாமைத்துவத்தின் கருத்துநிலைகள் மற்றும் நுட்பங்கள் பழக்கங்களை கைத்தொழில் மற்றும் சேவையாட்களிடம் கல்வியூட்டிப் பயிற்றுவித்தல்
  • தேசிய பரிசோதிப்பு இயலுமையினை விருத்தி செய்வதுடன் பரிசோதிப்பு வசதிகளை வழங்குதல்
  • நியமங்கள் தொழில்நுட்ப ஒழுங்குவிதிகள் மற்றும் தொடர்புடைய வெளியீடுகளில் ஆவணப்படுத்தல் மற்றும் தகவல் சேவைகளை வழங்குதல்.
  • தேசிய நலனைப் பாதுகாப்பதற்காக சர்வதேச மற்றும் பிராந்திய நியமப்படுத்தல் செயற்பாடுகளில் பங்குபற்றுதல்
  • நிறுவனத்தையும் அதன் வளங்களையும் தொடர்ச்சியாக விருத்தி செய்து மேம்படுத்துதல்.

செய்திகளும் நிகழ்ச்சிகளும்

  • 1
  • 2
New Sri Lanka Standards Catalogue This content is only available in English    The new  Sri Lanka Standards Catalogue has been published and is available for sale at the SL... Read more
National Quality Awards-2015 This content is only available in English    Congratulations to award winners ! National Quality Awards-2015WINNERS Service - Large Cate... Read more

© 2011 இலங்கை கட்டளைகள் திணைக்களம் முழுப் பதிப்புரிமையுடையது
17 விக்டோரியா இடம், எல்விடிகள பாதை, கொழும்பு 08.


மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது