ஆய்வுகூட சேவைகள்
ஆய்வுகூட சேவைகள் பிரிவானது இலங்கை நியமங்கள் நிறுவனத்தின் மிகப்பெரிய தொழில்நுட்ப பிரிவாக உள்ளதுடன், அங்கே இரசாயனப் பொருட்கள், மின்சாரம், உணவு, பண்டங்கள், நுண்ணங்கி உயிரியல், ஆடை துணிகள் போன்ற ஆறு ஆய்வுகூடங்களிலே 71 பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஆய்வுகூடச் சேவைப் பிரிவின் தொழில்நுட்ப பணியாளர்களாக இருபத்தைந்து பட்டதாரி அதிகாரிகள் பட்டப்பின்படிப்பு தகைமைகளுடனும் பணியாற்ற, அவர்களுடன் இருபத்தாறு தொழில்நுட்ப அலுவலர்களும் பணியாற்றுகின்றனர். இப்பணியாள் தொகுதி உறுப்பினர்கள் தமது விடயப்பரப்பில் விசேடித்துவம் பெற்றதாக இருப்பதுடன், மிகவும் தகைமை வாய்ந்தவர்களாகவும் உள்ளனர். ஒவ்வொரு ஆய்வுகூடமும் ஒரு உதவிப் பணிப்பாளரால் தலைமை தாங்கப்படுகிறது.
ஆய்வுகூடப் பிரிவில் கிடைக்கக்கூடியதாகவுள்ள பரிசோதிப்பு வசதிகளாவன தேசிய மற்றும் சர்வதேச நியமங்களின் பிரகாரம் பல உற்பத்திகளையும் பண்டங்களையும் பரிசோதிப்பதற்கு வசதியளிக்கிறது. ISO/IEC 17025 அடிப்படையிலான ஆய்வுகூட முகாமைத்துவ முறைமையானது ஆய்வுகூட சேவைகள் பிரிவுக்குள்அமுல்படுத்தப்படுவதுடன், இரசாயனப்பொருள், உணவு, பண்டங்கள், மற்றும் நுண்ணங்கி உயிரியல் ஆய்வுகூடங்களானவை சுவீடன் (SWEDAC) அங்கீகரிப்புச் சபையினது சில பரிசோதிப்புக்களுக்காக அங்கீகரிப்பு பெற்றுள்ளது. இதற்கு மேலதிகமாக இரசாயன உணவு மற்றும் நுண்ணங்கி உயிரியில் ஆய்வுகூடங்களானவை இலங்கை அங்கீகரிப்புச் சபையிலும் அங்கீகாரம் பெறுகிறது. இவ் அங்கீகரிப்பு நிலையானது நம்பத்தகுந்ததும், தொழில்நுட்ப ரீதியான செல்லுபடியான பரீட்சிப்புக்கான ஆய்வுகூடங்களின் தகைமையை உறுதிப்படுத்துகிறது. ஆய்வுகூட சேவைகள் பிரிவானது பணிப்பாளரின் (ஆய்வுகூடம்) வழிகாட்டல் மற்றும் பணிப்புக்களின் கீழ் தொழிற்படுகிறது.
ஆய்வுகூட தர உறுதிப்பாடு
வாடிக்கையாளர்களுக்கு நம்பத்தகுந்ததும் சரியானதுமான பரிசோதிப்பு சேவைகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக ஆய்வுகூட சேவைகள் ISO 17025 ஆய்வுகூடஅங்கீகாரம் ஆய்வுகூட தர முகாமைத்துவ முறைமை என்பவற்றின் பிரகாரம் ஆய்வுகூட தர முகாமைத்துவ முறையை நிறுவிப் பேணுவதற்காக ஒரு உதவிப்பணிப்பாளர் ஒதுக்கப்பட்டுள்ளார்.
ISO 17025 இன்பிரகாரம் ஆய்வுகூட அங்கீகரிப்பு மற்றும் ஆய்வுகூட தர முகாமைத்துவ முறைமை மீதான ஆய்வுகூடப் பணியாளர்களின் பயிற்சி மற்றும் வழிகாட்டலை வழங்குவதையும் இது உள்ளடக்கியுள்ளது. ஆய்வுகூடத்திற்காக ஒதுக்கப்பட்ட பணிப்பாளர் ஆனவர் இசைவு மதிப்பீட்டுக்கான சுவிடிஸ் அங்கீகரிப்புச் சபையுடன் அங்கீகார இணைப்பை ஏற்படுத்துவதுடன் இசைவு மதிப்பீட்டுக்கான இலங்கை அங்கீகாரச் சபையுடனும் உரிய ஆய்வுகூடங்களுடன் 17025:2005 பிரகாரம் வழங்கப்பட்ட அங்கீகாரத்தைப் பேணுவதற்கு இணைப்புக்களை பேணுகிறார்.
ISO 17025 அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகூடங்களும் அவைகளின் அங்கீகரிப்பு வீச்சுக்களும்
|
ஆய்வுகூடம் |
அங்கீகரிக்கப்பட்ட இலக்கம் |
அங்கீகரிக்கப்பட்ட வீச்சுக்கள் |
|
இரசாயனப் பொருள், உணவு மற்றும் நுண்ணங்கி உயிரியியல் ஆய்வுகூடங்கள் |
1793 |
http://search.swedac.se/omfattning/1793-01%20Ackr%20omfattning%20091021.pdf |
|
பண்டங்கள் ஆய்வுகூடம் |
பண்டங்கள் ஆய்வுகூட அலகானது 2011 இன் ஆரம்பப்பகுதியில் மதிப்பிடல் மற்றும் அங்கீகாரத்திற்கு காத்திருத்தலை பூர்த்தி செய்தது.. |
|
http://search.swedac.se/listCompany.asp?id=5&adrId=35134&sAck=1793_01&lang=en
SLSI யின் SLAB அங்கீகாரம் பெற்ற ஆய்வுகூடங்கள்
|
ஆய்வுகூடம் |
அங்கீகரிக்கப்பட்ட இலக்கம் |
அங்கீகரிக்கப்பட்ட வீச்சுக்கள் |
|
நுண்ணங்கி உயிரியல் ஆய்வு கூடம் |
|
சான்றுப்பத்திரம் |
|
இரசாயன ஆய்வு கூடம் |
TL016-01 |
சான்றுப்பத்திரம் |
|
உணவு ஆய்வு |
TL016-03 |
சான்றுப்பத்திரம் |
செய்திகளும் நிகழ்ச்சிகளும்
- 1
- 2





