Sinhala (Sri Lanka)English (United Kingdom)

உற்பத்தி சான்றுப்படுத்தல்

SLS இலச்சனைத் திட்டம் எனப் பிரபல்யமாக அறியப்படும் உற்பத்தி சான்றுப்படுத்தல் திட்டமானது ஒரு உற்பத்தியின் தரம் மீது ஒரு மூன்றாம் தரப்பால் வழங்கப்படும் ஒரு உத்தரவாதத்தைக் கொடுக்கும் திட்டமாகும். இத் திட்டமானது இலங்கை நியமங்களுக்கு ஏற்புடையதாக பொருட்களை உற்பத்தி செய்யும் உள்நாட்டு மற்றும் கடல்கடந்த உற்பத்தியாளர்களுக்கு அவர்களின் உற்பத்திகள் மீது SLS அனுமதிப்பத்திரங்களை வழங்கச் செய்கின்றது. 1984ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க இலங்கை கட்டளைகள் நிறுவனச் சட்டம் மற்றும் அதில் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகள் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் வலுவூட்டலின் கீழ் உற்பத்தியாளர்களுக்கு அவ்வண்ணமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை இயலச் செய்கிறது.

இந்த உற்பத்திச் சான்றிதழ் வழங்கல் திட்டமானது இயல்பில் தன்னார்வமான ஒன்றாகும். எவ்வாறு இருப்பினும் SLS இலச்சனையானது 1979ஆம் ஆண்டு 1ஆம் இலக்க நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 2003 ஆம் ஆண்டு நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபைச் சட்டம் என்பவற்றின் கீழ் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் ஊடாகச் செய்யப்பட்டாகும். எவ்வாறாயினும் ஒழுங்குவிதிகள் மாற்றமடையாது அவ்வாறே உள்ளன.

பண்டம் அல்லது உற்பத்தி மீது சான்றுப்படுத்தல் இலச்சனை இருப்பதானது அப்பண்டம் அல்லது உற்பத்தியானது தொடர்ச்சியாக, உரிய இலங்கை நியமங்கள் விசேட விதந்துரைப்பின் கீழ் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை குறித்துரைப்பதுடன், தரம் குறித்த நியாயமான அளவு உறுதிப்படுத்துகையுடன் கொள்வனவு செய்யக்கூடியது என்பதையும் குறித்து நிற்கிறது. குறித்த விதந்துரைப்பின் தேவைப்பாடுகளுடன் இயைந்துபோவதானது, தர உறுதிப்பாட்டு முறைமையின் ஒழுங்கான கண்காணிப்பு ஊடாக உறுதிப்படுத்தப்படுவதுடன், நிறுவனத்தின் தகுதிவாய்ந்த கணக்காய்வாளர்களின் கணக்காய்வு மற்றும் உற்பத்தி பரீட்சிப்பு என்பவற்றாலும் உறுதிப்படுத்தப்படுகின்றது.

நிறுவனத்தின் பொது கொள்கையாக அமைவது உற்பத்தியாளரிடம் உரிய நியமங்கள் இருக்கும்படியாக நியமத்திற்கு ஒத்துப்போகும் பொறுப்புக்கள் அமையத்தக்க விதமான வகையில் சான்றுப்படுத்தல் பொறித்தல் திட்டத்தை நிர்வகிப்பதே ஆகும். இதனைச் செயற்படுத்துவதற்காக ஒரு பொருத்தமான தர உறுதிப்பாட்டு முறைமையானது நிறுவனத்தால் குறிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுடன் இயைந்து செல்லும்படியாக, ஒவ்வொரு அனுமதிப்பத்திரம் பெறுபவராலும் கைக்கொள்ளப்பட வேண்டும். தர முறைமையினை ஆவணப்படுதல் மற்றும் நடைமுறைப்படுத்தலுக்கான பொறுப்பு இங்கே உள்ளதுடன் இத் தர முறைமையின் தொடர்ச்சியான வினைத்திறனானது கிரம இடைவேளையில் நிறுவனத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் பரிசோதிக்கப்படும்.

செய்திகளும் நிகழ்ச்சிகளும்

  • 1
  • 2
New Sri Lanka Standards Catalogue This content is only available in English    The new  Sri Lanka Standards Catalogue has been published and is available for sale at the SL... Read more
National Quality Awards-2015 This content is only available in English    Congratulations to award winners ! National Quality Awards-2015WINNERS Service - Large Cate... Read more

© 2011 இலங்கை கட்டளைகள் திணைக்களம் முழுப் பதிப்புரிமையுடையது
17 விக்டோரியா இடம், எல்விடிகள பாதை, கொழும்பு 08.


மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது