இறக்குமதிப் பரிசோதிப்பு
அறிமுகம்
இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் உரிய இலங்கை நியமங்கள் குறித்துரைப்பின் பிரகாரம் (SLS) நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவதும், இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு சிபார்சு செய்வதுமே, இறக்குமதி பரிசோதிப்புத் திட்டத்தின் (IIS) இலக்காக உள்ளது. 1969ஆம் ஆண்டு முதலாம் இலக்க இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் கட்டு்ப்பாட்டுச் சட்டத்தின் கீழான 2006 ஆம் ஆண்டு 06 ஆம் மாச 1ஆம் திகதிய 1447/28 வர்த்தமானி பிரசுரத்தினை இத்திட்டம் அடிப்படையாக கொண்டுள்ளது. இறக்குமதிக்கென குறித்தொதுக்கப்பட்ட பண்டங்களின் நியமங்களின் படியான இருப்பானது பின்வரும் அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
அ) ஏற்றுமதி செய்யும் நாட்டிலிருந்து வரும் சரக்கு ஆதரித்து, நிற்கும் நியமத்தை ஒத்திருப்பதை ஒழுங்கு உறுதிப்படுத்தும் சான்றுப்பத்திரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல்.
ஆ) ஏற்றுமதி செய்யும் நாட்டின் தேசிய அமைப்பினால், அல்லது ஒரு நாட்டின் தேசிய நியம அமைப்பினால் வழங்கப்பட்ட உற்பத்தியின் சான்றுப்படுத்தல் அடையாளத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல்.
இ) ஏற்றுமதி செய்யும் நாட்டிலிருந்தான உற்பத்தியின் உற்பத்தியாளருடனான கடந்தகால அனுபவமும் நம்பகத்தன்மையும்
1. அங்கீகாரம் பெறுவதற்கான வழிமுறைகள்
1.1 IIS திட்டத்தின் கீழ் வரும் ஏதாவது ஒரு பண்டத்தினை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கும் இறக்குமதியாளர், கீழே தரப்பட்டுள்ள பொருத்தமான தேவைப்பாடுகளுடன் பரிச்சயமானவராக இருக்க வேண்டும்.
1.11. குறித்துரைக்கப்பட்ட பண்டங்களின் இறக்குமதி செய்யப்பட்ட சரக்குக்கள் பின்வருமாறு பரந்தளவில் வகைப்படுத்தப்பட வேண்டும்.
வகைப்பாடு 1 :
இறக்குமதி செய்யப்படும் சரக்குகளானவை SLSI உடன் பதிவு செய்யப்பட்ட ஒரு வெளிநாட்டு ஆய்வுகூடம் அல்லது ஒரு பரிசோதிப்பு முகவர் அல்லது SLSI யில் பதிவு செய்துள்ள வேறு ஏதாவது அரச நிறுவனத்தின் நியமங்களின் படியாக இருக்கும், ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றுதழ் உறுதிப்படுத்தலை கொண்டிருத்தல்.
இறக்குமதியாளருக்ககான நன்மைகள் : சமர்ப்பிக்கப்பட்ட நியமங்களின்படி ஒழுகியிருப்பதை உறுதிப்படுத்தும் சான்றுப்பத்திரம் ஆனது, வரு சரக்கிற்காக ஏற்றக்கொள்ளக்கூடியதாக இருந்தால், அவ் வரும் சரக்கானது விற்பனைக்கு அங்கீகரிக்கப்படுவதுடன், விற்பனைக்கோ மாதிரியின்றி பயன்படுத்துவதற்கோ அங்கீகரிக்கப்படும். மூன்று தடவைகள் வரும் வருசரக்குகளில் ஒரு தடவையில் வரும் வருசரக்கானது எழுந்தமானமானமாக, பரிசோதிக்கப்படுவதற்காக எடுக்கப்படுவதுடன், மாதிரிப் பரிசோதிப்புக்கு பின்பு வரு சரக்கானது அங்கீகரிக்கப்படும். எவ்வாறாயினும் SLSI ஆனது உற்பத்தியாளர் ஆய்வுவுகூடம் மற்றும் இறக்குமதியாளரின் கடந்தகால செயற்பாடுகளின் அடிப்படையிலேயே மாதிரி பரிசோதிப்புக்கான கால இடைவேளையைத் தீர்மானித்துக்கொள்ளும்.
வகைப்பாடு 2:
ஏற்றுமதி செய்யும் நாட்டின் தேசிய நியமங்கள் அமைப்பிடமிருந்தான ஒரு நியம ஒழுகலை உறுதிப்படுத்தும் சான்றுப்பத்திரத்துடன் வரும் சரக்குகள், உரிய இலங்கை நியமங்கள் விதந்துரைப்புக்களின் பிரகாரம் நியம ஒழுகலை சான்றுப்படுத்தும் சான்றுப்பத்திரம் வழங்கப்படும்.
இறக்குமதியாளருக்கான நன்மைகள்: வரு சரக்கிற்கான, நியமத்துடன் ஒட்டியொழுகுதலை உறுதிப்படுத்தும் சமர்ப்பிக்கப்ட்ட சான்றுப்பத்திரம் இருந்தால், வரு சரக்கானது விற்பனைக்கோ அல்லது மாதிரிப் பரிசோதிப்பின்றி பயன்படுத்துவதற்கோ அங்கீகரிக்கப்படும். மூன்று தடவைகள் வரும் வரு சரக்கிலிருந்து ஒரு தடவை வரும் வரு சரக்கானது எழுந்தமானமான பரிசோதிப்பிற்காக மாதிரி எடுக்கப்படுவதுடன் மாதிரிப் பரிசோதிப்பின் பின் வரு சரக்கானது அங்கீகரிக்கப்படும். எவ்வாறாயினும் உற்பத்தியாளர் மற்றும் இறக்குமதியாளரின் கடந்தகால செயற்பாடுகளின் அடிப்படையில் மாதிரிப் பரிசோதிப்பிற்கான கால இடைவேளையை SLSI யை தீர்மானிக்கும்.
வகைப்பாடு 3:
SLSI யுடன் பதிவு செய்யப்பட்ட ஒரு உற்பத்தி பொறித்தொகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வரு சரக்கு: உற்பத்தி செய்யும் பொறித்தொகுதியிடமிருந்து வரும் ஒவ்வொரு வரு சரக்குத் தொகுதிக்காகவும் ஒரு நியம ஒழுக்க சான்றுப்பத்திரம் ஒவ்வொன்றுடனும் உள்ளடக்கப்பட வேண்டும்.
இறக்குமதியாளருக்கான நன்மைகள்: சமர்ப்பிக்கப்பட்ட நியம ஒழுக்க சான்றுப்பத்திரம் (CC) ஆனது வரு சரக்கின் நியம ஒழுக்கத்தை தீர்மானிப்பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால், அது விற்பனைக்காகவோ அல்லது மாதிரிப் பரிசோதிப்பின்றி பயன்படுத்துவதற்கோ அங்கீகரிக்கப்படும். எவ்வாறாயினும் ஐந்து தடவைகள் வரும் சரக்குகளில் ஒரு தடவை வரும் சரக்கு என்ற ரீதியில் எழுந்தமானமான பரிசோதிப்பிற்காக மாதிரி எடுக்கப்படுவதுடன் உற்பத்தியாளர் மற்றும் இறக்குமதியாளரின் கடந்தகால செயற்பாடுகளின் அடிப்படையில் மாதிரிப் பரிசோதிப்பிற்கான கால இடைவேளை காணப்படும்.
வகைப்பாடு 4:
உரிய இலங்கை நியம விதந்துரைப்புக்களுடன் பொருதுவதாக உள்ள, சொல்லப்பட்ட நியம சான்றுப்பத்திரத்தை பயன்படுத்தும் எந்த நாட்டினதும் தேசிய நியம அமைப்பின் உற்பத்திச் சான்றுரைப்பு சின்னத்தைக் கொண்டுள்ள உற்பத்திப் பொருட்களின் வரும் சரக்கு.
இறக்குமதியாளரின் நன்மைகள்:
அ) இலங்கை நியமங்கள் நிறுவனத்தின் உற்பத்திச் சான்றுச் சின்னத்தை (SLSI சின்னம்) உற்பத்திப்பொருள் கொண்டிருக்குமாயின், அவ் வரு சரக்கானது விற்பனைக்கோ அல்லது மாதிரிப் பரிசோதிப்பின்றி பயன்படுத்துவதற்கோ விடுவிக்கப்படும். எட்டு தடவை வரும் வரு சரக்கில் ஒரு தடவையே எழுந்தமாற்றாக மாதிரிப் பரிசோதிப்புக்கு மாதிரி எடுக்கப்படுவதுடன், மாதிரிப் பரிசோதிப்புக்கு பின்பு வரு சரக்கானது அங்கீகரிக்கப்படும். எவ்வாறாயினும் உற்பத்தியாளர் மற்றும் இறக்குமதியாளரின் கடந்தகால செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மாதிரிப் பரிசோதிப்பின் கால இடைவேளை SLSI ஆல் தீர்மானிக்கப்படும்.
ஆ) உற்பத்திப் பொருளானது வேறு நாடுகளின் ஏற்றுக்கொள்ளக்கூடிய உற்பத்திச் சான்று உரைப்புச் சின்னத்தைக் கொண்டிருப்பின் அவ் வரு சரக்கானது விற்பனைக்கோ, மாதிரிப் பரிசோதிப்பின்றி பயன்படுத்துவதற்கோ அங்கீகரிக்கப்படும். ஐந்து தடவைகளுக்கு ஒரு தடவை வரும் வருசரக்கே எழுந்தமாற்றான பரிசோதிப்புக்காக மாதிரி பெறப்படுவதுடன் மாதிரி பரிசோதிப்பின் பின்பு வரு சரக்கானது அங்கீகரிக்கப்படும். எவ்வாறாயினும் உற்பத்தியாளர் மற்றும் இறக்குமதியாளரின் கடந்தகாலச் செயற்பாட்டின் அடிப்படையில் மாதிரிப் பரிசோதிப்பிற்கான கால இடைவேளை SLSI ஆல் தீர்மானிக்கப்படும்.
வகைப்பாடு 5:
மேற்படி வகைப்பாடுகளுக்குள் வராத வருசரக்குகள்
1.1.2 குறித்தொதுக்கப்பட்ட பண்டங்களின் இறக்குமதியுடன் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களானவைகளில், உரிய இலங்கை நியமங்களுடன் வருசரக்கின் ஏற்புடைமையை உறுதிப்படுத்துவதற்காக உறுப்புரை 1.1.1 இல் தரப்பட்ட 1 -3 வகையான வகைப்பாடுகளின் கீழ் வருவனவற்றுக்கு ஒரு குறித்துரைத்த ஏற்றுமதிக்கு முந்திய ஏற்புடைமை சான்றுப்பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். விபரமான பரிசோதிப்பு விளைவுகளையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
1.1.3 குறித்தொதுக்கப்பட்ட சில பண்டங்களை இறக்குமதி செய்ய எண்ணும் ஒரு இறக்குமதியாளர் (இறக்குமதி செய்ய எண்ணும் பண்டங்களுடன் தொடர்புடைய) ஒரு பரிசோதிப்பு அறிக்கையையும் Performa SLSI க்கு சமர்ப்பிப்பதுடன் இறக்குமதி நோக்கத்திற்காக கடன் பத்திரத்தை நிறுவிக்கொள்வதற்கு முன்பதாக அவ் பண்டங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையா என நிறுவனத்திடமிருந்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும். எவ்வாறாயினும் 1.1.2 இல் குறிப்பிட்டவாறாக, இறக்குமதியின் கீழ் ஒரு குறித்த தொகுதி அல்லது தொகுதிகளுடன் ஏற்புடைய ஏற்றுமதிக்கு முந்தி இறக்குமதி சான்றுப்பத்திரத்தினை சமர்ப்பிப்பதிலிருந்து ஒரு இறக்குமதியாளருக்கு இது எவ்வகையிலும் விதிவிலக்கை வழங்காது.
1.1.4 உறுப்புரை 1.1.1 இன் உள்ளவாறாக வகைப்பாடு ஐந்தின் கீழ் வரும் குறித்தொதுக்கப்பட்ட பண்டங்களின் எந்த வரு சரக்கினதும் இறக்குமதியானது துறைமுகத்திலேயே மாதிரி எடுக்கப்படுவதுடன் பரிசோதிப்பு முடிவு கிடைக்கப்படும் வரை வருசரக்கானது துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படமாட்டாது. எவ்வாறெனினும் விடுவிப்பு பெறப்படும் வரைக்கும் சுங்க அனுசரணை களஞ்சியங்களுக்கு பொருட்களை விடுவிப்பதையை SLSI பரிசீலிக்க கூடும். துறைமுக வளாகத்திலே மாதிரி எடுப்பது சிரமமாக இருந்தால் அல்லது பரிசோதிப்பு விளைவுகளை குறுகிய காலப்பகுதியில் பெற முடியாது இருக்குமாக இருந்தால் வருசரக்கானது இறக்குமதியாளர் மற்றும் உற்பத்தியாளரின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் தனிப்பட்ட உத்தரவாதக் கடிதங்களின் அடிப்படையில் இறக்குமதியாளரின் களஞ்சியசாலைக்கு வரு சரக்கை விடுவிக்கலாம்.
1.1.5 துறைமுக வளாகத்திலேயே மாதிரி எடுப்பததில் சிரமானவைகள், அல்லது குறுகிய காலப்பகுதிக்குள்ளே மாதிரி பரிசோதிப்பு முடிவுகளை பெற முடியாதவைகளின் பண்டங்களின் வருசரக்குகளானவை வகைப்பாடு 1,2 அல்லது 3 இல் குறித்துரைக்கப்பட்டவாறாக தாமதங்களை தவிர்ப்பதற்காக ஏற்றுக்கொள்ளக்கூடிய தரச்சான்றுப்பத்திரம் ஒன்றுடன் ஆதரவுப்படுத்தப்பட வேண்டும்.
1.1.6 எவ்வாறாயினும் SLSI ஆனது இவ் எந்த வரு சரக்குகளில் இருந்தும், ஒன்றில் எழுந்தமான ரீதியான அடிப்படையில் அன்றேல் வரு சரக்கின் தரம் தொடர்பாக நியாயமான சந்தேகமிருந்தாலும், அவைகளை பரீட்சிப்புக்கு உட்படுத்துவதற்கே அதிகாரத்தை வைத்திருக்கின்றது. அதிருப்திகரமானது எனக் காணப்பட்ட இவ்வண்ணமான வரு சரக்குகளை விடுவிப்பதற்கு SLSI மறுக்க முடியும்.
2. வழங்கப்படும் சேவை வகைகள்
இருவகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. அவையாவன விரைவுச் சேவை மற்றும் சாதாரண சேவை என்பன, எமது பெறுமதியான வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. இறக்குமதியாளர் தேவையான சேவையை தெரிவு செய்யக்கூடிய விருப்பத் தெரிவைக் கொண்டிருக்கிறார்.
2.1 ஒரு வருசரக்கிற்கான அவதானிப்பு சமர்ப்பிப்பு செயன்முறையை துரிதப்படுத்த ஒரு இறக்குமதியாளர் விரும்பின் அறிவித்தலை, விசேட கருமபீடத்தில் சமர்ப்பிக்கையில் மிக உயர் முன்னுரிமையென குறிப்பிடும்பொழுது, அவ்வாறான அறிவிப்புகளுக்கு மிக உயர் முன்னுரிமை வழங்கப்படுவதுடன், பரீட்சிப்பின் குறுகியகால இடைவெளியைப் பொறுத்து மிகவும் விரைவாக இறுதித் தீர்மானம் வழங்கப்படும். இவ் விரைவுச் சேவை மீது ஏற்படும் மேலதிக கட்டணமானது இறக்குமதியாளரிடமிருந்து அறவிடப்படும்.
2.2 சாதாரண சேவை
சாதாரண வழிவகைகள் ஊடாக அறிவித்தலைச், செயற்படுத்த இறக்குமதியாளர் விரும்பின், சாதாரணச் சேவையைப் பயன்படுத்த முடியும். சில சமயங்களில் இறக்குமதியாளர் இச் செயன்முறையை துரிதப்படுத்த விரும்பின் வேண்டுகோளுடன் ஒரு மேலதிக கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் இதனை விரைவுச் சேவையாக மாற்றிக்கொள்ளவும் முடியும்.
3 அறிவிப்பைச் சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகள்
3.1 ஒரு இறக்குமதியாளர் அறிவித்தலை உரிய முறையில் நிரப்பி மூன்று பிரதிகளையும் பின்வரும் ஆதரவு ஆவணங்களையும் இலங்கையில் செயற்படும் மொழியாகிய ஆங்கிலத்தில் நிரப்பி SLSI யிடம், வருசரக்கை பரிசோதிக்கும் போதியளவு கால இடைவேளையைக் கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.
3.2
அ) வர்த்தக நிலுவைப்பட்டியலின் பிரதி
ஆ) வருசரக்கு மற்றும் ஒவ்வொரு தொகுதியிலிருந்துமான அளவு என்பவற்றை உள்ளடக்கிய தொகுதிகளின் நிரலை வழங்கும் பொதியின் பிரதி
இ) சுமையேற்றிய பட்டியலின் பிரதி
ஈ) சுங்க நுழைவு எண்ணுடன் கூடிய சுங்கப்பிரகடனப் பிரதி அறிவித்தலை சமர்ப்பிக்கும் நேரத்தில், சுங்க நுழைவு இலக்கத்தை இறக்குமதியாளர் சமர்ப்பிக்க முடியாத நிலையில் வங்கி முத்திரையிடப்பட்ட விலைப்பட்டியல் சமர்ப்பிக்கப்படும்.
உ) ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏற்புடைமை சான்றுப்பத்திரம் ஏதாவது இருப்பின் (CC) வருசரக்கானது பல தொகுதிகளையும் வேறுபட்ட வடிவமைப்புக்களையும் தரங்களையும் கொண்டிருப்பின் தரசான்றுப்பத்திரமானது ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு வடிவமைப்புக்கும் வழங்கப்பட வேண்டும்.
3.2 வேறுபட்ட நியமங்களை உள்ளடக்கிய ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு விலைப்பட்டியலுக்கும் ஒரு பிறிது பிறிதான அறிவித்தல் சமரப்பிக்கப்படும்.
3.3 புதிய இலங்கை நியமங்கள் விதந்துரைப்புக்கு வருசரக்கின் ஏற்புடைமையை சுட்டிக்காட்டும், உறுப்புரை
1.1.2 இல் சுட்டிக்காட்டப்பட்டவாறாக ஏற்புடைமை சான்றுப்பத்திரத்தின் அறிவிப்பு படிவத்துடன் சேர்க்கப்பட வேண்டும். ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏற்புடைமை சான்றுப்பத்திரம் வரு சரக்கிற்கு கிடைக்கக்கூடியதாக இருப்பின் ஏற்றுமதிக்கு முந்தி ஏற்றுமதி சான்றுப்பத்திரத்தின் அசல் பிரதியானது SLSI பணிப்பாளர் நாயகத்திற்கு சான்றுப்படுத்தும் முகவரால் நேரடியாக அனுப்பப்பட வேண்டும். ஒரு முன்னதான பிரதியானது SLSIக்கு நேடியாக செயன்முறையை துரிதப்படுத்துவதற்காக தொலைநகல் செய்யப்படலாம். (தொலைநகல் இல 0094-11-2671579 / 0094 - 11- 5354320). SLSI க்கு ஏற்றுமதிக்கு முந்திய ஏற்புடைமை சான்றுப்பத்திரம் தொலைநகல் செய்யும் சந்தர்ப்பங்களில் அதன் அசல் சான்றுப்பத்திரமும் பின்பு வழங்கப்பட வேண்டும்.
3.4 அறிவிப்பு படிவம் கிடைத்ததும் SLSI ஆனது வரு சரக்கானது பரிசோதிப்பிற்கோ அல்லது மாதிரி எடுத்தலுக்கோ அல்லது பரீட்சிப்பிற்கோ உட்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். மாதிரி எடுக்க நிறுவனம் தீர்மானிக்குமிடத்து, இறக்குமதியாளர் பரிசோதிப்பிற்கு மற்றும் மாதிரி எடுப்பு பொறுப்பெடுப்பதற்கு முன்பதாக பிரயோகிக்கக்கூடிய பொருத்தமான செலவினத்தைச் செலுத்துவார்.
3.5 இறக்குமதி செய்யப்படும் வரு சரக்கிற்கான விடுவிப்பை பெற்றுக்கொள்வதற்காக ஒரு இறக்குமதியாளரால் சமர்ப்பிக்கப்படும் ஒரு அறிவித்தலானது எந்த நோக்கத்திற்குமான தரசான்றுப் பத்திரமாக கருதப்பட முடியாதது. எந்த இறக்குமதியாளரோ அல்லது எந்தத் தரப்பினரோ இவ் அறிவிப்பை இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்கான சான்றுப்பத்திரமாக பயன்படுத்த முடியாது.
4.மாதிரி எடுத்தல்
4.1 மாதிரி எடுத்தல் மேற்கொள்ளப்படுவதாயின் இலங்கை நியமங்கள் நிறுவனத்தின் அதிகாரி (கள்) மாதிரி எடுத்தலை உரிய மாதிரி எடுத்தல் நடைமுறைப்படுத்தல் பிரகாரம் மேற்கொள்வார்.
4.2 SLS 428 குறித்துரைக்கப்பட்டவாறு எழுந்தமாதிரியான இலக்கு அட்டவணைகளைப் பயன்படுத்தி எழுந்தமாதிரியாக தெரிவு மேற்கொள்ளப்படும்.
4.3 பரிசோதிப்பு மற்றும் மாதிரி எடுத்தலை மேற்கொள்வதற்கான அத்தியாவசியமான வசதிகள் இறக்குமதியாளரால் வழங்கப்படும். (உதாரணம் வேண்டிய தொழிலாளர், தேவையேற்படின் மாதிரி எடுத்தல் கருவிகள்) மாதிரி எடுத்தல் மற்றும் பரீட்சித்தல் செலவினமானது இறக்குமதியாளராலேயே பொறுக்கப்படும்.
4.4 இறக்குமதியாளர் SLS க்கு பரிசோதித்த திகதி, நேரம், அமைவிடம் என்பனவற்றை அறியத்தருவார்.
4.5 சேகரிக்கப்பட்ட மாதிரியானது இனங்காணப்பட்ட ஆரம்ப மற்றும் / அல்லது விபரமான பரீட்சைக்கு உள்ளாக்கப்படும்.
4.6 SLS ஆல் இனங்காணப்பட்ட பாரதூர தேவைப்பாடுகளை வருசரக்கு பூர்த்தி செய்யுமாக இருந்தால், அறிவிப்பு படிவமானது அங்கீகரிக்கப்பட்டதாக முத்திரை குத்தப்படும். ஒரு வர்த்தகப் பெயருக்கான அல்லது உற்பத்திக்கான குறித்த ஒரு உற்பத்தியாளரின் முதலாவது வருசரக்கு தொடர்பாக இலங்கை நியமங்கள் நிறுவனம் ஆனது ஏற்புடைமை மதிப்பிடுவதற்காக தொகுதியை விடுவித்த பிற்பாடு விபரமான முற்றுமுழுதான பரீட்சிப்பை மேற்கொள்ளும். அது விபரமான பரீட்சிப்பானது ஏற்புடைத்தன்மை இன்மையை சுட்டிக்காட்டினால் இறக்குமதியாளருக்கு அது அறிவிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் அதி உற்பத்தியாளரிடமிருந்து வரும் வருசரக்குகள் விபரமான பரிசோதிப்புக்கு உள்ளாக்கப்படும். SLS ஆனது தரத்தில் திருப்திப்படும் வரைக்கும் இந் நடைமுறையே பின்பற்றப்படும்.
4.7 பரிசோதிக்கப்பட்ட மாதிரியானது பாரதூரமான தேவைப்பாடுகளில் நியமக் குறைவானதாக கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், இறக்குமதியாளர் வருசரக்கை ஏற்றுமதியாளருக்கு திருப்ப அனுப்பும்படி மதியுரை செய்யப்படுவார். 1969 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் 1987 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க சட்டத் திருத்தம் என்பவற்றின் உரிய நியமங்களின் பிரகாரம் ஏற்புடைமை பெறாத ஏதாவது பண்டமும் இலங்கைக்குள் இறக்குமதியாளர் இறக்குமதி செய்து கொண்டதாக, இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் காணும் சந்தர்ப்பங்களில் தேசிய பொருளாதாரத்தின் நன்மைக்காவும் நுகர்வோர் பாதுகாப்புக்காகவும் அவ் இறக்குமதியாளரை இனங்கண்டு உறுதிப்படுத்திக்கொள்வதற்குத் தேவையான தகவல்களையும் பெயர் விலாசங்களையும் குறித்துரைத்த ஒரு நிரலை வர்த்தமானியில் பிரசுரிப்பார்.
5. மனுக்கள்
இறக்குமதியாளர் மேற்கொண்ட மதிப்பீட்டில் திருப்தியடையாது இருப்பின் அவர் SLS பணிப்பாளர் நாயகத்திற்கு மீள்பரிசோதிப்பிற்கு அல்லது மீள் மாதிரி எடுப்பிற்காக அறிவிப்பு கிடைத்த மூன்று வேலைநாட்களுக்குள் மனுச்செய்யலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் SLS இனால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களின் தீர்ப்பு இறுதியானதும் ஆகும். மாதிரிகள் பாரதூரமாக தவறுமாக இருந்தால் SLS ஆனது மனுவை மறுத்தும் விடலாம்.
6. கட்டணக் கட்டமைப்பு: (ஒரு கோப்பிற்கான இணைப்பு)
செய்திகளும் நிகழ்ச்சிகளும்
- 1
- 2





