SLSIயின் இறக்குமதி சோதனை திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுகின்ற பொருட்கள் யாவை?
1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2014.01.08ஆம் திகதியிட்ட 1844/49ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இலங்கை தரப்படுத்தல் (SLSI) நிறுவகத்தின் இறக்குமதி சோதனை திட்டத்தின் கீழ் 123 பொருட்கள் உள்ளடக்கப்படுகின்றன. பொருட்களின் பட்டியலை SLSI இணையதளத்தில் பார்க்க முடியும்.
அந்த பொருட்களை நான் எப்படி அறிந்துகொள்ள முடியும்?
- SLSI நிறுவகத்தின் தர உறுதிப்படுத்தல் பிரிவின் நிர்வாக அலுவலருடன் தொடர்புகொள்ளுவதன்மூலம்.
தொலைபேசி +94 112 671 567 நீடிப்பு: 393 - SLSI நிறுவகத்தின் இணையத்தளத்தை பார்ப்பதன்மூலம்
- 2014.01.08ஆம் திகதியிட்ட 1844/49ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலைப் பார்ப்பதன்மூலம்.
என்னுடைய உற்பத்தி SLSI வேண்டுகோள்களை உறுதிப்படுத்துகிறதா?
- பொருத்தமான கட்டளையில் தரப்பட்டுள்ள குறித்த வேண்டுகோள்கள்
- பொருத்தமான இலங்கை கட்டளைக்கெதிராக மாதிரிகளை சோதிப்பதன்மூலம்
எவ்வாறு என்னுடைய உற்பத்தி பொருளுக்கு பொருத்தமான இலங்கை கட்டளையை நான் பெற்றுக்கொள்ளுவது?
இறக்குமதியாளர் SLSI நிறுவகத்தின் ஆய்வுகூடத்திற்கு மாதிரியொன்றைச் சமர்ப்பிப்பதன்மூலம், மேலதிக தகவல்களுக்கு தயவுசெய்து ஆய்வுகூட சேவைகள் பிரிவுடன் தொடர்புகொள்ளவும். நீடிப்பு: 501, 502, 503 மற்றும் 504.
இறக்குமதியாளர் அவராகவே மாதிரியை சமர்ப்பிக்கும்போது அவரால் சமர்ப்பிக்கப்படுகின்ற சோதனை அறிக்கையை SLSI ஏற்றுக்கொள்ளுமா?
இல்லை
பொருள் தயாரிப்பாளர்கள்/ஆய்வுகூடங்கள் வழங்குகின்ற சோதனை அறிக்கையை SLSI ஏற்றுக்கொள்ளுமா?
ஆம். பதிவுசெய்யப்பட்ட பொருள் தயாரிப்பாளர் அல்லது ஆய்வுகூடம் சோதனை அறிக்கையை வழங்கினால் மாத்திரம்.
என்னுடைய இறக்குமதிசெய்யப்பட்ட உற்பத்திகளைப்பற்றி SLSI தர உறுதி பிரிவுக்கு அறிவிப்பது எப்படி?
ஒழுங்காக நிரப்பப்பட்ட "அறிவிப்பு படிவத்தின்" மூலம்.
அறிவிப்பு படிவத்தை நான் பெற்றுக்கொள்ளுவது எப்படி?
- SLSI இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தல்
- தர உறுதிப்படுத்தல் பிரிவின் "பிரதான கருமபீடத்தில்" இருந்து
எந்த நேரத்தில் நான் அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்?
அனுப்புபொருளுக்குரிய ஆவணங்களை இறக்குமதியாளர் (பொருட்பட்டியல், பொதிப்படுத்தல் பட்டியல், ஏற்றுபொருட் பட்டியல் போன்றவை) பெற்றுக்கொண்டவுடன்.
அறிவிப்பு படிவத்தை நிரப்பும் சரியான வழி என்ன?
தயவுசெய்து இணைப்பில் உள்ள மாதிரி அறிவிப்பு படிவத்தைப் பார்க்கவும்.
அறிவிப்பு படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய துணை ஆவணங்கள் யாவை?
பணிப்பாணை
- வர்த்தக பொருட்பட்டியல்
- பொதிப்படுத்தல் பட்டியல்
- ஏற்றுபொருட் பட்டியல்
பொருத்தமானவை
- தர சான்றிதழ்
- சோதனை அறிக்கைகள்
- சுகாதார சான்றிதழ்கள்
- சுங்க பிரகடன படிவம் (cusdec)
- அனுப்பிய நாடு
- தனிப்பட்ட பயன்பாட்டுக்கு இறக்குமதிசெய்யப்பட்டால் நிரூபிக்கும் ஆவணங்கள்
துணை ஆவணத்துடன் நான் யாரிடம் அறிவிப்பு படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்?
SLSI தர உறுதிப்படுத்தல் பிரிவுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் ஆரம்ப தீர்மானத்தை அறிந்துகொள்ள நான் எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டும்?
6 மணித்தியாலங்கள் (சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரியாக பூர்த்திசெய்யப்பட்டிருந்தால்)
ஆரம்ப தீர்மானத்தை அறிந்துகொள்வது எப்படி?
SLSI தர உறுதிப்படுத்தல் பிரிவு கருமபீடத்துடன் தொடர்புகொள்வதன்மூலம்.
உணவு உற்பத்திகள்
அலகு 1 அலகு 2
தொலைபேசி நீடிப்பு. 363 நீடிப்பு. 360
உணவு அல்லாத உற்பத்திகள்
அலகு 3 அலகு 4
தொலைபேசி நீடிப்பு. 361 நீடிப்பு. 359
எந்த நேரத்தில் செலுத்தீட்டைச் செலுத்த வேண்டும்?
இறக்குமதியாளர் ஆரம்ப தீர்மானத்தைப் பெற்றுக்கொண்டவுடன்.
செலுத்த வேண்டிய செலுத்தீடு என்ன?
தர உறுதிப்படுத்தல் பிரிவு கருமபீடத்துடன் தொடர்புகொள்வதன்மூலம்.
உணவு உற்பத்திகள்
அலகு 1 அலகு 2
தொலைபேசி நீடிப்பு. 363 நீடிப்பு. 360
உணவு அல்லாத உற்பத்திகள்
அலகு 3 அலகு 4
தொலைபேசி நீடிப்பு. 361 நீடிப்பு. 359
சோதிப்பதையும் மாதிரியைப் பெறுவதையும் ஒழுங்குசெய்வது எப்படி?
குறித்த செலுத்தீட்டைச் செலுத்தியதன் பின்னர் சோதிப்பு/மாதிரியைப் எடுக்கக்கோரும் கடிதத்தை சமர்ப்பிப்பதன்மூலம். கோரிக்கை கடிதத்தை தொலைநகல் மூலம் அனுப்ப முடியும். தொலைநகல் இலக்கம்: +94 115 354 320
மாதிரி கோரிக்கை கடிதத்தை இணையதளத்தில் பார்க்கவும்.
சோதனை மற்றும் மாதிரிகளைப் பெறும் நேரம் என்ன?
சோதிப்பு/மாதிரியைப் பெறும் கடிதத்தை சமர்ப்பித்ததன் பின்னர் ஒரு வேலை நாளுக்குள் சோதிப்பு/மாதிரியைப் பெறுதல் மேற்கொள்ளப்படும்.
- RCTயில் சோதனை/மாதிரியைப் பெறும் நேரம் : மணி 0930 - மணி 1730
- இறக்குமதியாளர்/ஏனைய களஞ்சியங்கள் : மணி 1000 - மணி 1600
இறுதி தீர்மானத்தை வழங்கும் சராசரி நேரம் என்ன?
ஒவ்வொரு உற்பத்தியையும் சோதனையிடும் நேரம் வேறுபடுவதால் சரியாக நிர்ணயிக்க முடியாது.
பொருட்கள் திருப்தியற்றிருந்தால் என்னுடைய நிலை என்ன?
அந்த விடயத்தில் சில விருப்பத்தேர்வுகள் இருக்கின்றன,
- மீள் மாதிரியைப் பெறுவதற்கு/மீள் சோதனைக்கு SLSIயிடம் கோரிக்கை விடுத்தல் (01 முறை மாத்திரம்)
- முடிவை ஏற்றுக்கொண்டு அனுப்புபொருளை அழித்துவிடல்
- முடிவை ஏற்றுக்கொண்டு அனுப்புபொருளை மீள ஏற்றுமதிசெய்தல்
SLSI முடிவையும் வழிகாட்டலையும் நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால், என்ன நடக்கும்?
SLSI இலங்கை சுங்கத்திற்கும் மற்றும் பொருத்தமான அதிகாரசபைகளுக்கும் அவர்களது நடவடிக்கைகளுக்கு அறிவித்தல் அதாவது அபராதம் விதித்தல் கறை நிரலில் சேர்த்தல் போன்ற நடவடிக்கை எடுப்பார்கள்